Virat Kohli: முதல் பவுண்டரி அடிக்க இத்தனை பந்துகளா? Tough கொடுத்த ஆடுகளம்! அப்பாடா என Relief ஆன கோலி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Virat Kohli: முதல் பவுண்டரி அடிக்க இத்தனை பந்துகளா? Tough கொடுத்த ஆடுகளம்! அப்பாடா என Relief ஆன கோலி

Virat Kohli: முதல் பவுண்டரி அடிக்க இத்தனை பந்துகளா? Tough கொடுத்த ஆடுகளம்! அப்பாடா என Relief ஆன கோலி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 15, 2023 06:37 PM IST

சமீப காலங்களில் இதுபோன்றதொரு மெதுவான இன்னிங்ஸ் கோலி விளையாடியதில்லை. அத்துடன் பவுண்டரி அடித்த பிறகும் இப்படியொரு விநோத கொண்டாட்டத்தை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்  போட்டியில் முதல் பவுண்டரி அடித்த பிறகு அப்பாட என ரியாக்ட் செய்த கோலி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் பவுண்டரி அடித்த பிறகு அப்பாட என ரியாக்ட் செய்த கோலி

இதற்கு முன்னர் இப்படியொரு நிதான இன்னிங்ஸ் சமீப காலங்களில் கோலி விளையாடிதில்லை. கோலியின் இந்த பொறுமையான ஆட்டத்துக்கு காரணமாக இருந்ததில் ஆடுகளம் தன்மை முக்கிய பங்கு வகித்தது. பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருந்த இந்த ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் நிதானமாகவே ரன்களை எடுத்தனர்.

கோலி வழக்கமான எனர்ஜியுடன் பேட் செய்தாலும் தனது முதல் பவுண்டரியை தான் எதிர்கொண்ட 81வது பந்தில் அடித்து அனைவருக்கும் சர்ப்ரைசான விஷயமாகவே அமைந்தது. அத்துடன் மற்றொரு சர்ப்ரைசாக முதல் பவுண்டரி அடித்த பின்னர் அப்பாடா என்றவாரு Relief ரியாக்‌ஷனை வெளிப்படுத்தினார். வானத்தை பார்த்து சில வார்த்தைகளை முணுமுணுத்த கோலி, ஜெய்ஸ்வாலிடம் சிரித்தவாறு வார்த்தை பரிமாற்றங்களை வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர் இரண்டாவது இரண்டாவது பவுண்டரியை 123வது பந்தில் அடித்தார். இதன்பின்னர் அடுத்த 40 பந்துகளில் அவர் பவுண்டரி எதுவும் அடிக்கவில்லை.

தனது ஒட்டு மொத்த இன்னிங்ஸில் 5 பவுண்டரிகளை அடித்த கோலி, அவரது ஸ்டிரைக் ரேட் 41.75ஆக உள்ளது. இந்த போட்டியில் கோலி பவுண்டரி அடித்த பிறகு வெளிப்படுத்திய Relief ரியாக்‌ஷன், 2004ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 40 பந்துகளை எதிர்கொண்ட பிறகு முதல் ரன் அடித்த ராகுல் டிராவிட், பேட்டை உயர்த்தி காட்டியதை நினைவு கூறும் விதமாக அமைந்திருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற ரோசோ விண்ட்சர் பார்க் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுக்கும் விதமாக இருந்தது. அத்துடன் பவுண்டரிகள் அடிப்பதிலும் சிரமத்தை ஏற்படுத்தியதோடு, அவுட் பீல்ட் மிகவும் மெதுவாக இருந்ததால் அதிக ரன்கள் ஓடியே எடுக்க வேண்டிய நிலை பேட்ஸ்மேன்களுக்கு ஏற்பட்டது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 20 முதல் 24 வரை போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.