Virat Kohli: ஷேவாக்கின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Virat Kohli: ஷேவாக்கின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

Virat Kohli: ஷேவாக்கின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

Manigandan K T HT Tamil
Jul 14, 2023 09:41 PM IST

தற்போது டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி (AFP)

இது அவரது 29வது டெஸ்ட் கிரிக்கெட் அரை சதம் ஆகும். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 8500 ரன்களை கடந்தார் விராட் கோலி.

இதன்மூலம், டெஸ்டில் 8500 ரன்களுக்கு மேல் குவித்த 6வது இந்திய வீரர் ஆனார் கோலி. 21 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கின் 8503 ரன்கள் என்ற சாதனையையும் முறியடித்த கோலி, தற்போது டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.

இதுவரை டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டிய பிற வீரர்கள் யார் யார்?

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். உலக கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். டெண்டுல்கரைத் தொடர்ந்து தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.

இந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் தான் டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரராக திகழ்ந்தார்.

அவரது சாதனையை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆலன் பார்டர் தகர்த்தார்.

சுனில் கவாஸ்கருக்கு அடுத்த இடத்தில் வி.வி.எஸ்.லஷ்மண் உள்ளார். இவர் மொத்தம் 8781 ரன்களை டெஸ்டில் குவித்துள்ளார்.

டொமினிகாவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று விராட் கோலி பேட்டிங் செய்து வருகிறார்.

முன்னதாக, இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தனது 10வது சதத்தை அடித்துள்ளார். அத்துடன் அந்நிய மண்ணில் அவர் அடிக்கும் இரண்டாவது சதமாக அமைந்துள்ளது. இவற்றுடன் மற்றொரு அரிய சாதனையும் ரோஹித் படைத்துள்ளார்.

ரோஹித் ஷர்மா அரை சதம் அடித்தபோது இந்திய ஓபனர்களில் 102 முறைக்கு மேல் 50+ ஸ்கோர் அடித்து கவாஸ்கர், சேவாக் ஆகியோரை முந்தியுள்ளார். இந்த லிஸ்டில் முதல் இடத்தில் 120+ அரைசதத்துக்கு மேல் அடித்து சச்சின் டென்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.