Virat Kohli: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோலி விளையாட ஆர்வமாக இருக்கும் மைதானம் எது தெரியுமா?
உலகக் கோப்பை அக்டோபர் 5 அன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
உலகக் கோப்பை போட்டி அட்டவணை இன்று வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை 2023 அட்டவணை செவ்வாயன்று மும்பையில் வெளியிடப்பட்டது.
உலகக் கோப்பை அக்டோபர் 5 அன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
5 முறை உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி போட்டியை நடத்தும் இந்தியா மோதுகிறது.
முதல் முறையாக, 50 ஓவர் உலகக் கோப்பையை தனித்து நடத்தும் நாடாக இந்தியா உள்ளது. அவர்கள் இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற துணைக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளுடன் இணைந்து போட்டியை நடத்தியது.
இந்நிலையில், இந்திய அணியின் அதிரடி நாயகன் விராட் கோலி, தனக்கு பிடித்த மைதானம் குறித்தும், அங்கு விளையாட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறேன் என்பது குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தனிப்பட்ட முறையில், இந்த உலகக் கோப்பையில் மும்பையில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த சூழலை மீண்டும் அனுபவிப்பது நன்றாக இருக்கும். சொந்த மண்ணில் உலகக் கோப்பையை விளையாடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதையும், மக்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கப் போகிறார்கள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் விராட் கோலி.
சென்னையில் அக்டோபர் 8ம் தேதி இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை வங்கதேசமும், நியூசிலாந்தும் மோதுகின்றன.
இந்தப் போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 18ம் தேதி நியூசிலாந்தும், ஆப்கனும் சென்னையில் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதி ஆப்கன், பாகிஸ்தான் மோதும் போட்டி பிற்பகல் 2 மணிக்கும், அக்டோபர் 27ம் தேதி பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஆட்டமும் நடைபெறவுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது.
பைனல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலுள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. அதன்படி அகமதாபாத், சென்னை, பெங்களூரு, தரம்சாலா, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தா, மும்பை, புணே ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
டாபிக்ஸ்