Virat Kohli: 'வா மச்சான் வா'! 500வது போட்டியில் சதம் - முதல் பேட்ஸ்மேனாக அடித்து சாதித்த கோலி
500வது சர்வதேச போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷினாக திகழும் விராட் கோலி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது வீரராக பேட் செய்ய வந்த கோலி, சதமடித்துள்ளார்.
இது டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் 29வது சதமாகும். அத்துடன் சர்வதேச அரங்கில் தனது 76வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
விராட் கோலிக்கு இது 500வது சர்வதேச போட்டியாக அமைந்துள்ளது. அந்த வகையில் மைல்கல் போட்டியாக அமைந்திருக்கும் இதில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையும் புரிந்துள்ளார்.
இந்த போட்டியில் தனது அரைசதத்தை பவுண்டரி மூலம் நிறைவு செய்தார் கோலி. அதே போல் சதத்தையும் பவுண்டரி மூலம் பூர்த்தி செய்துள்ளார்.
சதமடித்தவுடன் உற்சாகமாக ஓடிவந்து ஜடேஜாவை கட்டிப்பிடித்த கோலி, பின்னர் ஹெல்மெட்டை நீக்கி ரசிகர்கள், அணியினரை பார்த்து பேட்டை உயர்த்தி அங்கீகாரம் பெற்றார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்தனர். ஜெயஸ்வால் 57, ரோஹித் ஷர்மா 80 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.
அதேபோல் கில் 10, ரஹானே 8 ரன்கள் எடுத்து தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கோலி 87, ஜடேஜா 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கி ஆட்டத்தின் 6வது ஓவரில் கோலி சதமடித்தார். 180 பந்துகளை எதிர்கொண்ட கோலி பவுண்டரி மூலம் சதத்தை நிறைவு செய்தார். கோலி தனது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளை அடித்தார்.
விராட் கோலி சதமடித்தபோது இந்திய அணியும் 300 ரன்கள் கடந்திருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்