Snake in LPL 2023 Match: மைதானத்தில் நிகழ்ந்த ரியல் நாகினி நடனம் - விஷம் மிகுந்த பாம்பு நுழைந்ததால் பரபரப்பு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Snake In Lpl 2023 Match: மைதானத்தில் நிகழ்ந்த ரியல் நாகினி நடனம் - விஷம் மிகுந்த பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

Snake in LPL 2023 Match: மைதானத்தில் நிகழ்ந்த ரியல் நாகினி நடனம் - விஷம் மிகுந்த பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 01, 2023 04:33 PM IST

லங்கா பிரிமீயர் லீக் தொடரில் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் வீச வந்த ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் மைதானத்தில் ரியல் நாகினி நடனத்தை கண்களிக்க நேர்ந்தது. பவுண்டரி அருகே பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து வீரர்கள் அச்சப்ப்டாமல் ஒருவருக்கொருவர் வேடிக்கை புன்னகையை வெளிப்படுத்தினர்.

லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கு இடையே மைதானத்தினுள் நுழைந்த பாம்பு
லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கு இடையே மைதானத்தினுள் நுழைந்த பாம்பு

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் காலே டைட்டன்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இதற்கிடையே ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்தாவது ஓவரை பவுலிங் செய்ய வந்தார் வங்கேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். அப்போது மைதானத்தில் சுமார் 6 முதல் 8 அடி நீளம் கொண்டு பாம்பு ஒன்று பவுண்டரி ஊர்ந்து செல்வதை கவனித்துள்ளார்.

 

இதுபற்றி மற்ற வீரர்களுக்கும் தெரிய வர, ஆட்டத்தை நிறுத்திவிட்டு மைதானத்தை விட்டு பாம்பு செல்லும் தொடராமல் காத்திருந்தனர். இதன் பின்னர் நான்காவது அம்பயர் பாம்புக்கு சற்று அருகில் சென்று அதனை மைதான பகுதியில் இருந்து விரட்டி வெளியேற்றினார்.

இதுவரை மைதானத்தில் பறவைகள் ஏதானும் நடப்பது, நாய்கள் வருவதை பார்த்துள்ளோம். ஆனால் போட்டிக்கு இடையே மைதானத்தின் உள்ளே பாம்பு நுழைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாம்பு உள்ள நுழைந்தாலும் வீரர்கள் யாரும் பதட்டம் அடையாமல் ரிலாக்ஸாகவே இருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் டுவிட்டரில் வேடிக்கையான கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், "நாகினி மீண்டும் வந்துள்ளது. அது வங்கதேசத்தில் தான் உள்ளது என நினைத்திருந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த 2018இல் வங்கதேசத்தில் நடைபெற்ற நிதாஸ் கோப்பை தொடரில் வெற்றி கொண்டாட்டத்தில் நாகினி டான்ஸ் ஆட தயாராக இருந்த வங்கதேச ரசிகர்களின் திட்டத்தை தனது அதிரடியால் தவிடுபொடியாக்கினார். அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக அவர் இந்த டுவிட் பதிவை பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.