Chess: செஸ் விளையாட்டில் அக்கா - தம்பியாக வைஷாலி - பிரக்ஞானந்தா செய்து தனித்துவ சாதனை
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Chess: செஸ் விளையாட்டில் அக்கா - தம்பியாக வைஷாலி - பிரக்ஞானந்தா செய்து தனித்துவ சாதனை

Chess: செஸ் விளையாட்டில் அக்கா - தம்பியாக வைஷாலி - பிரக்ஞானந்தா செய்து தனித்துவ சாதனை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 02, 2023 05:09 PM IST

கிராண்ட மாஸ்டர் பட்டத்தை வெல்வதற்கு இளம் வீராங்கனையான வைஷாலி ரமேஷ்பாபு 2500 ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ளார். இந்தியாவின் மூன்றாவது பெண்ணாகவும், தமிழ்நாட்டிலிருந்து முதல் கிராண்ட்மாஸ்டராகவும் மாறியுள்ளார்.

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் அக்கா தம்பியாக சாதனை புரிந்த வைஷாலி - பிரக்ஞானந்தா
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் அக்கா தம்பியாக சாதனை புரிந்த வைஷாலி - பிரக்ஞானந்தா

இதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற வைஷாலி 2,500 பிடே ரேட்டிங் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.

22 வயதாகும் வைஷாலி இந்தியா அளவில் மூன்றாவது பெண்ணாகவும், தமிழ்நாட்டில் இருந்து முதல் பெண்ணாகவும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டராக மாறியுள்ளார்.

இந்தியாவிலிருந்து கோனேரு ஹம்பி, ஹிரிகா த்ரேனவல்லி ஆகியருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெண்ணாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.

இதுகுறித்து வைஷாலி கூறியதாவது:

இரண்டு ரவுண்ட் ஆட்டங்கள் மட்டும் இருந்தன. இந்த போட்டி கொஞ்சம் அழுத்தம் மிக்கதாகவே இருந்தது. எனது ஆட்டம் இடைப்பட்ட நேரத்தில் சிறப்பாக இல்லாவிட்டாலும், ொரு வழியாக வெற்றி பெற்றுவிட்டேன்.

இறுதியாக பட்டம் வென்றதில் மகிழ்ச்சி. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருப்பது சந்தோஷத்தை அளித்துள்ளது. நான் செஸ் விளையாட்டு விளையாட தொடங்கியபோது இருந்த இலக்கை அடைந்துவிட்டேன்"

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வெற்றியின் மூலம் வைஷாலி மற்றும் அவரது தம்பி பிரக்ஞானந்தா ஆகியோர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் அக்கா - தம்பி என்ற சாதனையை புரிந்தனர்.

2015ஆம் ஆண்டில் வைஷாலி முதல் சர்வதேச செஸ் போட்டியில் விளையாடினார். ஆசிய யூத் சாம்பியன்ஷிப் தொடரில் யு14 பிரிவில் விளையாடிய அவர் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.