Minister Anurag Thakur: ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Minister Anurag Thakur: ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்

Minister Anurag Thakur: ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்

Manigandan K T HT Tamil
Jul 11, 2023 10:11 PM IST

மோட்டோஜிபியை நடத்தும் 31 வது நாடாக இந்தியா இருக்கும், மேலும் இந்த ஆண்டு 21 பந்தய காலண்டரில் 14 வது சுற்று இதுவாகும்.

விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர்
விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர்

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்த சர்வதேச சர்க்யூட் இந்த ஆண்டு செப்டம்பர் 22 முதல் 24 வரை இந்தியாவின் முதல் மோட்டோஜிபி பந்தயத்தை நடத்துகிறது.

இந்நிலையில், இந்த பந்தயத்தை பிரபலப்படுத்தும் நோக்கில், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்குர் கடந்த சனிக்கிழமை மோட்டோஜிபி ரைடர்களுடன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றார்.

மோட்டோஜிபியை நடத்தும் 31 வது நாடாக இந்தியா இருக்கும், மேலும் இந்த ஆண்டு 21 பந்தய காலண்டரில் 14 வது சுற்று இதுவாகும்.

மோட்டோ ஜிபி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த பெரிய நிகழ்வு இந்தியாவின் கௌதம் புத்தா நகரில் நடைபெற உள்ளது.

முதல் முறையாக இந்தியா மோட்டோ ஜிபி பந்தயத்தை நடத்துகிறது. இப்போது ரேஸ் பைக்குகளுக்கு ஊக்கம் கிடைக்கும் நமது ஆட்டோமொபைல் துறைக்கும் நிறைய ஊக்கம் கிடைக்கும்.

"இது ஒரு பெரிய முன்முயற்சியாக இருக்கும். இது ஒரு தொடக்கம் மட்டுமே, பந்தயத்தில் இந்தியா புதிய உயரங்களை எட்டும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று அனுராக் தாக்குர் இந்த நிகழ்வில் கூறினார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர் சவாரி செய்வதற்கு முன்பு மோட்டோஜிபி பாரத் அணியால் ஹெல்மெட் அளிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் ஜூன் 23 அன்று டிக்கெட் விற்பனையை தொடங்கி வைத்தார்.

மேலும் இந்தப் போ்டியை தொடங்க ஆதரவு அளித்த அவரது முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்காக முதல் டிக்கெட்டும் அவருக்கு வழங்கப்பட்டது.

இது இந்தியாவில் மோட்டோஜிபியின் முதல் நிகழ்வுக்கு வழிவகுத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.