Tamil News  /  Sports  /  Ultimate Kho Kho Chennai Quick Guns Rajasthan Warriors Read More Details

Ultimate Kho Kho: சென்னை குயிக் கன்ஸ் வெற்றி நடை! மற்றொரு ஆட்டத்தில் குஜராத் வெற்றி

Manigandan K T HT Tamil
Jan 09, 2024 10:37 AM IST

குஜராத் ஜெயன்ட்ஸ் 9 ஆட்டங்களில் விளையாடி 6இல் வெற்றி கண்டது. 2இல் தோல்வி அடைந்தது.

சென்னையின் குயிக் கன்ஸ் அணியை ராஜஸ்தான் வாரியர்ஸை வீழ்த்தியது
சென்னையின் குயிக் கன்ஸ் அணியை ராஜஸ்தான் வாரியர்ஸை வீழ்த்தியது

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை குயிக் கன்ஸ் 42-19 என்ற கணக்கில் ராஜஸ்தான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. சென்னை குயிக் கன்ஸ் 9 ஆட்டங்களில் விளையாடி 6இல் வெற்றி கண்டது. இதுவரை ஒரே ஒரு தோல்வி தான் அடைந்தது.

குஜராத் ஜெயன்ட்ஸ் 9 ஆட்டங்களில் விளையாடி 6இல் வெற்றி கண்டது. 2இல் தோல்வி அடைந்தது.

ஒடிஸா ஜகர்நட்ஸ்-மும்பை கிலாடிஸ் இடையிலான 29வது ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு முதல் ஆட்டத்திலும் சென்னை குயிக் கன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான 30வது ஆட்டம் இரவு 8.30 மணிக்கு இரண்டாவது ஆட்டத்திலும் மோதுகிறது.

இந்தப் போட்டிகள் ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி முதல் அல்டிமேட் கோ கோ சீசன் 2 போட்டிகள் நடந்து வருகின்றன. ஜனவரி 13ம் தேதி பைனல் நடைபெறவுள்ளது.

அல்டிமேட் கோ கோ, இந்தியாவின் முதல் தொழில்முறை Kho Kho லீக் ஆகும். அமித் பர்மன் அவர்களால் இந்திய Kho Kho Federation of India (KKFI) உடன் இணைந்து இந்த லீக் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விளையாட்டான கோ கோவை ஒரு தொழில்முறை கட்டமைப்பிற்குள் சந்தைப்படுத்துதல் மற்றும் தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த லீக் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது இந்தியாவின் சொந்த உள்நாட்டு விளையாட்டை முன்னணிக்கு கொண்டு வருவதையும், இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு லீக்காக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்டிமேட் கோ கோ லீக் பழமையான இந்திய விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், இளம் திறமையாளர்கள் தங்கள் திறமைகளை இந்தியா மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தவும் பாடுபடுகிறது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்