Hardik Pandya: '2 தோல்விகள் நீண்ட கால திட்டத்தை மாற்றாது'-ஹர்திக் பாண்டியா
Hardik Pandya: 'இரண்டு தோல்விகள் அல்லது இரண்டு வெற்றிகள் நீண்ட கால திட்டங்களை மாற்றாது.'
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில், "இரண்டு தோல்விகள் நீண்டகால திட்டங்களை மாற்றாது" என்றார்.
முதல் 2 டி20 ஆட்டங்களில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. 5 டி20 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா தோற்று இருந்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியிருக்கும்.
எனினும், சிறப்பாக விளையாடி இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி கண்டது. 4வது டி20 ஆட்டம் சனிக்கிழமை நடக்கிறது.
நேற்று வெற்றி பெற்ற பிறகு ஹர்திக் பாண்டியா கூறுகையில், "வெற்றி பெறுவது மிக முக்கியம். இந்த மூன்று ஆட்டங்களும் விறுவிறுப்பாக இருக்கும் என்று ஒரு குழுவாக பேசினோம். இரண்டு தோல்விகள் அல்லது இரண்டு வெற்றிகள் நீண்ட கால திட்டங்களை மாற்றாது. இதுபோன்ற (கட்டாயம் வெல்ல வேண்டிய) ஆட்டங்களுக்கு வரும்போது நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும். நிக்கி (நிக்கோலஸ் பூரன்) பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை அவர் அடித்து ஆடினாலும் பார்த்துக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தோம்.
அவர்கள் (சூர்யகுமார் மற்றும் திலக்) ஒன்றாக விளையாடி நேரத்தை செலவிடுகிறார்கள். சூர்யா போன்ற ஒருவர் அணியில் இருப்பது நல்லது என்றார் ஹர்திக் பாண்டியா.
முன்னதாக, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், கட்டாய வெற்றியை பெற்றாக வேண்டிய நிலையில் இந்தியா போட்டியில் களமிறங்கியது.
ஒரு நாள், டி20 என தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வந்த சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான பாணியில் 360 டிகிரியில் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா முதல் வெற்றியை பெற்றதுடன், தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்தும் தப்பித்தது.
இதையடுத்து டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கேப்டன் ரோவ்மன் பவல் அதிரடியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இது இந்த தொடரில் அடிக்கப்பட்ட முதல் இரண்டு போட்டிகளை விட அதிகபட்ச ஸ்கோராகும். இதைத்தொடர்து 160 ரன்கள் சேஸ் செய்ய களமிறங்கியது இந்தியா. 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.
டாபிக்ஸ்