TNPL Record: 2022 சீசன் டிஎன்பிஎல்-இல் அதிக ஸ்கோர் பதிவு செய்த டாப் 3 பிளேயர்ஸ்!
Salem Spartans: தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு அதிக ஸ்கோர் விளாசிய டாப் 3 பிளேயர்ஸ் பற்றி பார்ப்போம்.
சஞ்சய் யாதவ்
சஞ்சய் யாதவ் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த சீசனில் 9 ஆட்டங்களில் விளையாடிய அவர், 452 ரன்களை குவித்தார். அதிகபட்ச ஸ்கோர் 103 நாட் அவுட். அவர் மொத்தம் 242 பந்துகளை எதிர்கொண்டார்.
ஸ்டிரைக் ரேட் 186.77. ஒரு சதம், 5 அரை சதம் விளாசிய சஞ்சய் யாதவ், 21 ஃபோர்ஸ், 40 சிக்ஸர்களை பதிவு செய்தார்.
சுரேஷ் குமார் ஜே
லைகா கோவை கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சுரேஷ் குமார் 10 ஆட்டங்களில் விளையாடி 398 ரன்களை குவித்தார். அவரது அதிகபட்சம் 83 நாட் அவுட். மொத்தம் 252 பந்துகளை எதிர்கொண்ட அவரது ஸ்டிரைக் ரேட் 157.93. 3 அரை சதம் விளாசினார். 41 ஃபோர்ஸ், 16 சிக்ஸர்களையும் பறக்க விட்டார்.
பாபா அபராஜித்
நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் விளையாடிய பாபா அராஜித், 9 ஆட்டங்களில் மொத்தம் 396 ரன்களை குவித்தார். கடந்த சீசனில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 92 நாட்-அவுட். ஸ்டிரைக் ரேட் 144.52. 3 அரை சதங்களை விளாசிய அவர், 25 ஃபோர்ஸ், 23 சிக்ஸர்களை பறக்க விட்டார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும்.
இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும். 7வது சீசன் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுவரை லைக்கா கோவை கிங்ஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
டாபிக்ஸ்