Tamil News  /  Sports  /  Tnpl Today Match Preview Ba11sy Trichy Vs Nellai Royal Kings 28th Match

TNPL Match Preview: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று கடைசி லீக் ஆட்டம்-ஆறுதல் வெற்றி பெறுமா திருச்சி?

Manigandan K T HT Tamil
Jul 05, 2023 06:15 AM IST

இந்த சீசனில் இதுவரை ஓர் ஆட்டத்தில் கூட பால்சி திருச்சி அணி வெற்றி பெறவில்லை. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமையும்.

திருச்சி வீரர்கள், நெல்லை வீரர்
திருச்சி வீரர்கள், நெல்லை வீரர் (@Ba11syTrichy)

ட்ரெண்டிங் செய்திகள்

நெல்லையில் நடைபெறவுள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. பால்சி திருச்சி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடைசி ஆட்டத்திலாவது ஜெயிக்க வேண்டும் என முனையும்.

அந்த அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அவர்கள் இன்னும் தங்கள் வெற்றிக் கணக்கைத் தொடங்காமல் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளனர்.

திருச்சி அணி முந்தைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது. கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜு 3/15 ரன்கள் கொடுத்து சூப்பர் கில்லீஸ் அணியை 129/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சேஸிங்கில் தடுமாறி 13.4 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

கடைசி லீக் போட்டியில் வெற்றியுடன் முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அந்த அணியின் ரசிகர்கள் உள்ளனர்.

மறுபுறம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி தனது முந்தைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி 159/7 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அருண் கார்த்திக் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சாளர்கள் கடுமையாக முயன்று ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர். ஆனால் டிராகன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருந்ததால் அவர்களின் வெற்றியை தடுக்க முடியவில்லை.

இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங் செய்ய நல்ல மைதானமாக திகழ்கிறது. கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பால்சி திருச்சி

கங்கா ஸ்ரீதர் ராஜூ (கேப்டன்), டி.சரண் (விக்கெட் கீப்பர்), கே.ராஜ்குமார், டேரில் ஃபெராரியோ, ஆர்.ராஜ்குமார், அந்தோணி தாஸ், ஆர்.சிலம்பரசன், ஜி.காட்சன், கே.ஈஸ்வரன், வி.அதிசயராஜ் டேவிட்சன், மணி பாரதி.

நெல்லை ராயல் கிங்ஸ்

அருண் கார்த்திக் (கேப்டன்), ஸ்ரீ நிரஞ்சன், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), அஜிதேஷ் குருசாமி, லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், நிதிஷ் ராஜகோபால், சோனு யாதவ், என்.எஸ்.ஹரிஷ், எம்.பொய்யாமொழி, எஸ்.மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்ஷய் ஜெயின் எஸ்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்