TNPL 2023 Record: இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 3 பவுலர்ஸ்
கடந்த சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இணை சாம்பியன் பட்டம் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் இந்த முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த 3 பவுலர்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிஎன்பிஎல் கிரிக்கெட் கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கி இம்மாதம் 12ம் தேதி முடிவு அடைந்தது.
கடந்த சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இணை சாம்பியன் பட்டம் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் இந்த முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஃபைனல் வரை முன்னேறிய நெல்லை பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதால் தோல்வியைத் தழுவி ரன்னர்-அப் ஆனது. நெல்லை வீரர் அஜிதேஷ், கோவை வீரர் சாய் சுதர்ஷன், மதுரை வீரர் குர்ஜப்னீத் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் கவனம் ஈர்த்தனர்.
ஓர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்ததில் பந்துவீச்சாளர்களின் பங்கு மிக அதிகம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.
இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 3 பந்துவீச்சாளர்கள் குறித்து பார்ப்போம். இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது லைக்கா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக் கான்.
இவர் மொத்தம் 9 ஆட்டங்களில் விளையாடி 17 விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தம் 27 ஓவர்களை வீசியிருக்கிறார். அவரது பெஸ்ட் பவுலிங் 16/3. எகானமி 6.66.
அடுத்த இடத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் வீரர் குர்ஜப்னீத் உள்ளார். இவர் 8 ஆட்டங்களில் விளையாடி 15 விக்கெட்டுகளை தூக்கியிருக்கிறார்.
மொத்தம் 29.4 ஓவர்களை வீசி 211 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இவரது பெஸ்ட் 15/3. எக்கானமி 7.11.
3வது இடத்தை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பவுலர் சுபோத் பாட்டீ பிடித்துள்ளார்.
இவர் மொத்தம் 9 ஆட்டங்களில் விளையாடி 35.1 ஓவர்களை வீசி 15 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். மொத்தம் 268 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இவரது பெஸ்ட் 37/4. எக்கானமி 7.62. ஓர் ஆட்டத்தில் 4 விக்கெட் வரை எடுத்து அசத்தியிருக்கிறார்.
குவாலிஃபையர் 1 சுற்றில் லைக்கா கோவை கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தான் 4 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி அசத்தினார். ஆனாலும், அந்த ஆட்டத்தில் திண்டுக்கல் தோல்வியைத் தழுவியது.
அடுத்தடுத்த இடங்களில் திண்டுக்கல் வீரர் வருண் சக்கரவர்த்தி (13 விக்கெட்டுகள்), நெல்லை ராயல் கிங்ஸ் பவுலர் பொய்யாமொழி (13 விக்கெட்டுகள்) உள்ளனர்.
டாபிக்ஸ்