TNPL: பந்து ஸ்டம்பில் படும்போது Jumping!க்ளீன் RunOutஇல் இருந்து தப்பித்த கோவை வீரர் - எப்படி தெரியுமா? விடியோ
கிரீஸை நோக்கி வந்தபோது பீல்டர் வீசிய பந்து, தன் மீது படாமல் இருக்க லைக்கா அணி பேட்ஸ்மேன் சுஜய் Jump செய்தபோது ஸ்டம்பில் பட்டது. ஆனால் யாரும் அப்பீல் செய்யாத நிலையில் தெளிவான அவுட்டில் இருந்து அவர் எஸ்கேப் ஆனார். இந்த நிகழ்வின் விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டிஎன்பிஎல் தொடரின் 19வது லீக் ஆட்டம் லைக்கா கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே சேலத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கோவை அணி 199 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து பேட் செய்த சேலம் 120 ரன்களில் ஆல்அவுட்டாகி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் கோவை அணி பேட் செய்தபோது, ஆட்டத்தின் 2.5 ஓவரில் ரன்அவுட் முயற்சி ஒன்று நடைபெற்றது. அப்போது பவுலர் திசையில் இருந்த கிரீஸ் அருகே நின்றிருந்த சுஜய், பீல்டர் வீசிய பந்து தன் மீது படாமல் இருக்க Jump செய்துள்ளார். ஆனால் அவரை கடந்து அந்த பந்து ஸ்டம்பில் பட்டது.
அந்த நேரத்தில் Jump செய்த சுஜய்யின் கால்கள் தரையில் படாமல் காற்றிலேயே இருந்துள்ளது. இது ரீப்ளையில் பார்க்கும்போது தெளிவான அவுட் என தெரிந்தது. ஆனால் பந்தை வீசி, ஸ்டம்பில் பட்ட சமயத்தில் யாரும் அப்பீல் செய்யாத காரணத்தால் அவர் தப்பித்தார். சேலம் பீல்டர்களும், அம்யர்களும் கூடி மூளை மங்கியதுபோல் இவ்வளவு பெரிய தவறை கவனிக்காமலேயே விட்டனர். இதன் காரணமாக அவர் தனது விக்கெட்டையும் பறிகொடுக்காமல் தப்பித்தார்.
இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திய சுஜய் 44 ரன்கள் எடுத்தார். இதற்கிடையே இந்த ரன்அவுட் சம்பவம் நிகழ்ந்தபோது அவர் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதன் பின்னர் அவர் கூடுதலாக 33 ரன்கள் எடுத்தார்.
சுஜய் - சாய்சுதர்சன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இது கோவை அணிக்கு சிறந்த அடித்தளமாக அமைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற கோவை அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
சேலம் அணி விளையாடிய 5 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9