TNPL Match Preview, Trichy vs Chepauk: அதிர்ஷ்டத்தை நம்பி களமிறங்கும் சேப்பாக் - முதல் வெற்றிக்கான தேடலில் திருச்சி
ப்ளேஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட கைமீறி சென்ற போதிலும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது. திருச்சி அணியை பொறுத்தவரை சீசனின் முதல் வெற்றிக்காக முழு முயற்சியில் ஈடுபடும் என நம்பலாம்.
டிஎன்பிஎல் 2023 தொடரின் 25வது போட்டியில் பால்சி திருச்சி - சேப்பாக் கில்லீஸ் மோதுகின்றன. இந்த போட்டி இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியாக மாலை 7.15 மணிக்கு திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத அணியாக திருச்சி உள்ளது. சேப்பாக் கில்லீஸ் மூன்று முறை சாம்பியன், ஒரு முறை எதிரணியுடன் கோப்பை பகிர்ந்து கொண்ட அணியாக இருந்து வரும் நிலையில், இந்த சீசனில் ப்ளேஆஃப் வாய்ப்பை கூட பெறவில்லை. தற்போது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே சேப்பாக் அணிக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு சாத்தியமாகும்.
இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகள் விளையாடி 2இல் மட்டுமே சேப்பாக் அணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது திருச்சி அணிக்கு எதிராக இந்த சீசனின் கடைசி போட்டியில் விளையாடுகிறது சேப்பாக். இந்த போட்டியில் வெற்றியுடன் கணிசமான ரன்ரேட்டையும் பெற வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த போட்டிக்கு பிறகு திருப்பூர், சேலம் அணிகளும், மதுரை அணியும் தங்களது போட்டிகளில் தோல்வி அடைந்தால் மட்டுமே சேப்பாக் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே சேப்பாக் அணி முழுக்க அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி இருப்பதால், திருச்சிக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய வெற்றியை பெறவே எதிர்பார்க்கும். அதேபோல் இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாத திருச்சி அணி, கண்டிப்பாக முதல் வெற்றியை பெறுவதற்காக முழு முயற்சியை வெளிப்படுத்தும் என நம்பலாம்.
இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் சேப்பாக் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. சேப்பாக் அணியில் நட்சத்திர வீரர்களாக நாரயண் ஜெகதீசன், பாபா அப்ரஜித் ஆகியோர் உள்ளனர். திருச்சி அணியில் யார்க்கர் மன்னன் நடராஜன் உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்