TNPL Fans: கோவையில் கொளுத்திய வெயில்-தலையில் துண்டு போட்டு கிரிக்கெட் பார்த்த ரசிகர்கள்!
TNPL 3rd Match: கெளுத்தும் வெயிலிலும் இரு அணி வீரர்களையும் ரசிகர்கள் உற்சாகப்படுத்தினர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் மதுரை பேந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று கோயம்புத்தூரில் விளையாடி வருகிறது. பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.
மதுரை அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மதுரை பேந்தர்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது. 120 பந்துகளில் 127 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை விளையாடவுள்ளது.
கோவையில் வெயில் கொளுத்தி வருகிறது மைதானத்திலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இருப்பினும், ரசிகர்கள் மரங்களில் இருந்து இலைக்கொத்துகளை ஒடித்து தலை மற்றும் முகத்தை மறைத்துக் கொண்டு குடைகளை விரித்து வைத்துக் கொண்டும் கண்டு ரசித்தனர். சில ரசிகர்கள் தலையில் துண்டை போட்டுக் கொண்டு போட்டியை ரசித்தனர்.
கெளுத்தும் வெயிலிலும் இரு அணி வீரர்களையும் ரசிகர்கள் உற்சாகப்படுத்தினர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும். 2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.
இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 7வது சீசன் போட்டி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குரூப் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம். நமது தமிழக வீரர்களுக்கு ஆதரவு தரலாம். Fancode செயலியிலும் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்க முடியும். இந்த முறை இன்று முதல் தொடங்கி ஒரு மாத காலம் நடக்கவுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி வரை இப்போட்டி நடக்கவுள்ளது.
மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி, நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
டாபிக்ஸ்