Tamil News  /  Sports  /  Tnpl Eliminator: Nellai Royal Kings To Play Qualifiers 2 After Beating Madurai By 4 Runs

TNPL Eliminator: கடைசி பந்தில் வெற்றி! குவாலிபயர் 2 போட்டியில் திண்டுக்கல் அணியை எதிர்கொள்ள இருக்கும் நெல்லை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 08, 2023 11:46 PM IST

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் 6 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்த மதுரை பேட்ஸ்மேன்கள் வெற்றியை எட்டாமல் தவறவிட்டனர். இதனால் த்ரில் வெற்றி பெற்ற நெல்லை அணி, குவாலிபயர் 2 போட்டியில் திண்டுக்கல் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மதுரை அணியை வீழ்த்தி குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்
மதுரை அணியை வீழ்த்தி குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

நெல்லை பேட்ஸ்மேன்களில் நிதிஷ் ராஜகோபால் 50 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார். அதேபோல் பார்மில் இருக்கும் குருசாமி அஜித்தேஷ் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடியான பினிஷிங் கொடுத்த ரித்திக் ஈஸ்வரம் 10 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மதுரை பவுலர்களில் முருகன் அஸ்வின் மட்டும் கட்டுப்பாடுடன் பந்து வீசி 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

மதுரை அணியின் ஸ்டிரைக் பவுலரான குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தபோதிலும் 42 ரன்கள் வாரி வழங்கினார். மற்றொரு பவுலரான அஜய் கிருஷ்ணா 3 ஓவர்கள் வீச 55 ரன்களை தாரைவார்த்தார்.

இதைத்தொடர்ந்து 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய மதுரை அணியும் பேட்டிங்கில் சரியான பதிலடி கொடுத்தது.

நெல்லை அணியில் களமிறக்கப்பட்ட மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வீரரான சந்தீப் வாரியர் வீசிய 3 ஓவர்களில் 46 ரன்களை மதுரை பேட்ஸமேன்கள் விளாசினர். ஓபனிங் பேட்ஸ்மேன் லோகேஷ்வர் 40 ரன்கள் அடித்து அதிரடியான தொடக்கத்தை தந்தார். இவரை தொடர்ந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஆதித்யா - ஸ்வப்னில் சிங் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர். ஆதித்யா 78 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிறப்பாக பேட் செய்து வந்த ஸ்வப்னிஸ் சிங் 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 14 ரன்கள் அடித்த மதுரை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து வெற்றியை பெற்ற நெல்லை அணி குவாலிபயர் 2 போட்டியில் திண்டுக்கல் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி வரும் திங்கள்கிழமை மாலை 7.15 மணிக்கு திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்