TNPL 2023 Today Match: நெல்லையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட சேலம் அணிக்கு வாய்ப்பு
புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் நெல்லை, சேலம் அணிகள் இருந்து வருகின்றன. இன்றைய போட்டியில் சேலம் அணி மிக பெரிய வெற்றி பெற்றால் டாப் 4 இடத்துக்கு தகுதிபெறும். கோவைக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டியாக இது அமைந்துள்ளது.
டிஎன்பிஎல் 2023 தொடரின் 13வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி திண்டுக்கல் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் இன்று மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது. இதுவே இந்த மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டியாக உள்ளது.
இந்த போட்டிக்கு பின்னர் சேலம் மைதானத்தில் வரும் வாரத்துக்கான போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
நெல்லை அணி இதுவரை இந்த சீசனில் 3 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அத்துடன் இதுவரை சேலம் அணிக்கு எதிராக இரண்டு முறை விளையாடியிருக்கும் நெல்லை அணி, இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
சேலம் அணி இந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 5வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் நெல்லை அணிக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பெறும்பட்சத்தில் சேலம் அணி டாப் 4 இடத்துக்கு முன்னேறலாம்.
இந்த சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதமும், ஒரே சதமும் அடித்த வீரரான குருசாமி அஜிதேஷ் நெல்லை அணியில் உள்ளார். அத்துடன் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களில் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அந்த அணியின் ஆல்ரவுண்டர் சோனு யாதவ் விளையாடிய போட்டிகளில் அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இரண்டு அணிகளிலும் சர்வதேச வீரர்கள் யாரும் இடம்பெறாத நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் மிக்க வீரர்கள் உள்ளார்கள். எனவே இந்த போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
அத்துடன் நெல்லை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு சீசன்களில் தோல்வியை தழுவியிருக்கும் சேலம் அணிக்கு அந்த அணியை வீழ்த்தி முதல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாக இந்த போட்டி உள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விதமாகவும், லோ ஸ்கோர் த்ரில்லர் போட்டிகளுமாக நடைபெற்ற திண்டுக்கல்லில் நடக்க இருக்கும் கடைசி ஆட்டமாக இது அமைந்திருக்கும் நிலையில் அடுத்ததாக ஜூன் 24 முதல் ஜூன் 29 வரையிலான போட்டிகள் சேலத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9