Kovai vs Trichy: ஆதிக்கத்தை தொடரும் கோவை! ஹாட்ரிக் தோல்வியுடன் பரிதாப நிலையில் திருச்சி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Kovai Vs Trichy: ஆதிக்கத்தை தொடரும் கோவை! ஹாட்ரிக் தோல்வியுடன் பரிதாப நிலையில் திருச்சி

Kovai vs Trichy: ஆதிக்கத்தை தொடரும் கோவை! ஹாட்ரிக் தோல்வியுடன் பரிதாப நிலையில் திருச்சி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 21, 2023 11:25 PM IST

பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் ஒப்பேறாத மற்றொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் பால்சி திருச்சி அணி இந்த சீசனில் ஹாட்ரிக் தோல்வியை பெற்ற முதல் அணியாக மாறியுள்ளது.

திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கோவை வீரர்கள்
திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கோவை வீரர்கள்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர் முழுமையாக பேட் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணியின் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜு பொறுப்புடன் பேட் செய்து அரைசதம் அடித்ததுடன் 58 ரன்கள் எடுத்தார்.

திருச்சி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் டக் அவுட் ஆனார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ராஜ்குமார் கடைசி கட்டத்தில் சிறிய கேமியோ இன்னிங்ஸ் விளையாடி 31 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தார்.

கோவை பவுலர்களில் மணிமாறன் சித்தார்த் 4 ஓவர்களில் வெறும் 13 ரன்களே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணியின் கேப்டன் ஷாருக்கான் 3 ஓவர்களில் 15 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 118 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய கோவை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முக்கிய பேட்ஸ்மேன்களான சுரேஷ் குமார், சாய் சுதர்சன் உள்ளிட்டோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

ஆனால் ஓபனிங் பேட்ஸ்மேனான சுஜய் நிலைத்து நின்று பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் இவர் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 59 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து சுஜய் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் 18.2 ஓவரில் கோவை அணி 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்த தவறிய திருச்சி இந்த சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியில் தொடர்ந்து 7வது இடத்தில் உள்ளது. 

கோவை அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.