Dindigul vs Madurai: 2+2 டாப் கிளாஸ் ஸ்பின்னர்களுக்கு இடையிலான போர் - வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் மதுரை
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Dindigul Vs Madurai: 2+2 டாப் கிளாஸ் ஸ்பின்னர்களுக்கு இடையிலான போர் - வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் மதுரை

Dindigul vs Madurai: 2+2 டாப் கிளாஸ் ஸ்பின்னர்களுக்கு இடையிலான போர் - வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் மதுரை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 18, 2023 11:10 AM IST

திண்டுக்கல் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய அணியாக ஆதிக்கம் செலுத்திய மதுரை அணி, இந்த முறை புள்ளிப்பட்டியலில் மோசமான ரன்ரேட்டுடன் கடைசி இடத்தில் இருந்து வரும் நிலையில் எழுச்சி பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கிளாஸ் ஸ்பின்னர்களுக்கு இடையிலான போர் ஆக அமைந்திருக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் - சீகம் மதுரை பேந்தர்ஸ் போட்டி
கிளாஸ் ஸ்பின்னர்களுக்கு இடையிலான போர் ஆக அமைந்திருக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் - சீகம் மதுரை பேந்தர்ஸ் போட்டி

இதுவரை இந்த இரு அணிகளும் 5 முறை மோதிக்கொண்ட நிலையில், மதுரை 3, திண்டுக்கல் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனை பொறுத்தவரை திண்டுக்கல் அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி என சர்வதேச அனுபவமும், ஐபிஎல் அனுபவமும் பெற்ற டாப் கிளாஸ் ஸ்பின்னர்கள் உள்ளார்கள்.

மதுரை அணி விளையாடி ஒரு போட்டியில் தோல்வியை தழுவியிருப்பதுடன், மோசமான ரன்ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் மதுரை அணிக்கு வெற்றியுடன், நல்ல ரன்ரேட்டும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. திண்டுக்கல் அணியை போல் மதுரை அணியிலும் சர்வேதச போட்டிகளில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற முருகன் அஸ்வின் என இரண்டு ஸ்பின்னர்கள் உள்ளார்.

அந்த வகையில் இரண்டு அணிகளிலும் இரண்டு முக்கிய பந்து வீச்சாளர்கள் உள்ளதால் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை காட்டிலும் இவர்களின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இந்த இரு ஸ்பின்னர்களில் ஒருவர் ஆஃப் ஸ்பின்னராகவும், இன்னொருவர் லெக்ஸ்பின்னராகவும் இருப்பது போட்டியை மேலும் சுவாரஸ்யபடுத்தும் என நம்பலாம். வருண் சக்கரவர்த்தி டாப் விக்கெட் எடுத்தவர்கள் லிஸ்டில் 3 விக்கெட்டுகளை எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஏற்கனவே திண்டுக்கல் அணிக்கு எதிராக கடந்த சீசன்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள மதுரை அணி இன்றைய  போட்டியிலும் அதை தொடர்ந்து வெற்றி கணக்கை தொடங்குவதற்கான முழு முயற்சியில் ஈடுபடலாம்.

இதை செய்ய தவறும்பட்சத்தில் தற்போதைய நிலையில் -3.139 நெட் ரன்ரேட் வைத்திருக்கும் மதுரை அணியின் நிலைமை மோசமாகிவிடும். 

இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளன. எனவே இன்று நடைபெறும் போட்டிகளில் திண்டுக்கல் டிராகன்ஸ் தவிர மற்ற மூன்று அணிகள் முதல் வெற்றியை பெறுவதற்காக களம் இறங்குகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.