Ishan Kishan: ‘வேணாம் sketch எனக்கு’-தொடர்ச்சியாக 3வது அரை சதம் விளாசிய இஷான் கிஷன்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ishan Kishan: ‘வேணாம் Sketch எனக்கு’-தொடர்ச்சியாக 3வது அரை சதம் விளாசிய இஷான் கிஷன்

Ishan Kishan: ‘வேணாம் sketch எனக்கு’-தொடர்ச்சியாக 3வது அரை சதம் விளாசிய இஷான் கிஷன்

Manigandan K T HT Tamil
Aug 01, 2023 08:24 PM IST

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே இன்று 3வது ஒரு நாள் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது.

அரை சதம் விளாசிய இஷான் கிஷன். (AP Photo/Ramon Espinosa)
அரை சதம் விளாசிய இஷான் கிஷன். (AP Photo/Ramon Espinosa) (AP)

ஷுப்மன் கில் அவருடன் இணைந்து விளையாடி வருகிறார். இருவரும் இணைந்து 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் எடுத்துள்ளனர்.

முன்னதாக, முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 பந்துகளில் 52 ரன்களும், இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் 55 பந்துகளில் 55 ரன்களும் விளாசி அசத்தினார் இஷான் கிஷன்.

மறுபக்கம் ஷுப்மன் கில்லும் அரை சதம் விளாசி அசத்தினார்.

முன்னதாக, முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 பந்துகளில் 52 ரன்களும், இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் 55 பந்துகளில் 55 ரன்களும் விளாசி அசத்தினார் இஷான் கிஷன்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. கடந்த 2 ஒரு நாள் ஆட்டங்களிலும் டாஸ் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கைத் தேர்வு செய்ததை அடுத்து, இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

18 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்துள்ளது. கில்லும் கிஷனும் நின்று விளையாடி வருகின்றனர்.

பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆடவர் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும். இதற்கு முன்பு மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் நடைபெற்றிருக்கிறது.

2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட், 5 டி20 ஆட்டங்களில் விளையாட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் யஷஸ்வி, இஷான் கிஷன் ஆகியோர் அறிமுகமாகினர். முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் டிரா ஆனது. அதைத் தொடர்ந்து நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவும், 2வது ஒரு நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும் ஜெயித்துள்ளன. இதனால் ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போட்டி சுவாரசியத்துடன் நடந்து வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.