SAFF Championship: மைதானத்தில் ஒலித்த 'வந்தே மாதரம்': 9-வது முறையாக இந்திய கால்பந்து அணி சாம்பியன்!
Football: இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
தெற்காசிய கால்பந்து சம்மேளன கோப்பை கால்பந்து போட்டியின் பைனலில் இந்தியா-குவைத் அணிகள் மோதின.
பெங்களூரில் நடந்த இந்த ஆட்டத்தில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்தியா, பெனால்டி ஷூட் அவுட் முறையில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம், 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா.
முன்னதாக, சுமார் 26ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் ஸ்டேடியத்தில் வந்தே மாதரம் பாடினர். முன்னதாக, பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் என்ற கணக்கில் இருந்தன.
ஆட்ட நேர முடிவு வரை எந்த அணியும் கோல் பதிவு செய்யவில்லை. இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் 5-4 என்ற கணக்கில் இந்திய வென்றது. இதற்கு முன்பு, 1993, 1997, 1999, 2005, 2009, 2011, 2021, 2015 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் ஆகியிருக்கிறது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு சுமார் ரூ.41 லட்சம் பரிசுத் தொகையும், ரன்னர் அப் ஆன குவைத் அணிக்கு சுமார் ரூ.20.5 லட்சமும் வழங்கப்படும்.
முன்னணி விளையாட்டு வீரர்களும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜும் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்