The Ashes 2023: 3வது டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  The Ashes 2023: 3வது டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி

The Ashes 2023: 3வது டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி

Manigandan K T HT Tamil
Jul 09, 2023 08:19 PM IST

2வது இன்னிங்ஸில் ஹாரி ப்ரூக் அபாரமாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார்.

இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்
இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் (AFP)

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்று இருந்த நிலையில், 3வது ஆட்டத்தில் இங்கிலாந்து ஜெயித்துள்ளது.

இதன்மூலம், தொடரை கைப்பற்றும் ரேசில் இங்கிலாந்து இணைந்துள்ளது. 

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதைத்தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து 237 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதைத்தொடர்ந்து, 26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அந்த அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 224 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இன்று 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி விளையாடியது.

சிறப்பாக விளையாடிய ஹாரி ப்ரூக் 75 ரன்கள் விளாசினார். கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் பதிவு செய்தார். தொடக்க வீரர் கிராவ்லி 44 ரன்கள் அடித்தார்.

இவ்வாறாக அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இதன்மூலம், ஆஷஸ் தொடர் 2-1 என்ற கணக்கில் உள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.