Team India new jersey: டி20 உலகக் கோப்பை! இந்திய அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம்
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணிக்கு புதிய ஜெர்சியுடன் களமிறங்குகிறது. எம்பிஎல் ஸ்பான்சர் செய்துள்ள அந்த ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அணி களமிறங்குகிறது இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஸ்கை ப்ளூ நிறத்தில் இந்த புதிய ஜெர்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி இந்தப் புதிய டிசைன் ஜெர்சியை அணிந்து களமிறங்கவுள்ளது.
முன்னதாக, கடந்த 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி இந்த ஸ்கை ப்ளூ நிறத்திலான ஜெர்சி அணிந்து விளையாடியது. இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் நடைபெற்ற முதல் டிை20 உலகக் கோப்பை தொடரிலும் அதே டிசைன் ஜெர்சியுடன் களமிறங்கி கோப்பையை தட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதைத்தொடர்ந்து தற்போது நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ மற்றும் ஜெர்சியை ஸ்பான்சர் செய்யும் எம்பிஎல் நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக இந்தியாவின் ஜெர்சி வடிவமைப்பு மாற்றப்பட உள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது இந்தியா அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியானது கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பில்லியன் சீர்ஸ் ஜெர்சி என பெயரும் வைக்கப்பட்டது.
இந்த புதிய ஜெர்சியை அணிந்தே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், அதற்கு அடுத்தபடியாக தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் இந்தியா களமிறங்குகிறது.
டாபிக்ஸ்