Womens Ashes 2023: டெஸ்டில் முதல் சதம் பதிவு செய்த இங்கிலாந்து வீராங்கனை!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Womens Ashes 2023: டெஸ்டில் முதல் சதம் பதிவு செய்த இங்கிலாந்து வீராங்கனை!

Womens Ashes 2023: டெஸ்டில் முதல் சதம் பதிவு செய்த இங்கிலாந்து வீராங்கனை!

Manigandan K T HT Tamil
Jun 24, 2023 05:47 PM IST

Tammy Beaumont: இன்றைய ஆட்டத்தில் டாம்மி பியூமாண்ட் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

மகளிர் ஆஷஸ் டெஸ்டில் சதம் விளாசிய டாம்மி
மகளிர் ஆஷஸ் டெஸ்டில் சதம் விளாசிய டாம்மி (REUTERS)

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து மகளிர் விளையாடி வருகிறது. 3வது நாளான இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி இங்கிலாந்து அணி 80 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களுடன் 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் டாம்மி பியூமாண்ட் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

டாமி பியூமாண்ட் தனது முதல் டெஸ்ட் மற்றும் ஆஷஸ் சதத்தைப் பதிவு செய்ய தனது குறிப்பிடத்தக்க பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். மேலும் அவர் தற்போது 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் (டி20, டெஸ்ட், ஒரு நாள்) சதம் அடித்துள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 சதங்களை பதிவு செய்துள்ள டாம்மி, 17 அரை சதங்களை விளாசியிருக்கிறார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் 10 அரை சதம், 1 சதம் விளாசியிருக்கிறார். டெஸ்டில் 2 அரை சதம், ஒரு சதம் பதிவு செய்திருக்கிறார்.

இவருக்கு தோள் கொடுத்த கேப்டன் ஹெதர் நைட் அரை சதமும், நாட் சிவர்-பிரண்ட் அரை சதமும் விளாசி ஆட்டமிழந்தனர்.

ஆஸி., வீராங்கனை ஆஷ்லி கார்ட்னர் 2 விக்கெட்டுகளையும், அன்னபெல் சதர்லேண்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து தொடர்ந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்தில் ஆடவர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரும் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்டில் ஆஸி., ஆடவர் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் வரும் 28ம் தேதி தொடங்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.