Tamil Thalaivas: நாளை முதல் பிகேஎல் போட்டிகள் - சவாலை எதிர்கொள்ள தயாராகும் தமிழ் தலைவாஸ்! அணியின் முழு விவரம் இதோ
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tamil Thalaivas: நாளை முதல் பிகேஎல் போட்டிகள் - சவாலை எதிர்கொள்ள தயாராகும் தமிழ் தலைவாஸ்! அணியின் முழு விவரம் இதோ

Tamil Thalaivas: நாளை முதல் பிகேஎல் போட்டிகள் - சவாலை எதிர்கொள்ள தயாராகும் தமிழ் தலைவாஸ்! அணியின் முழு விவரம் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 01, 2023 05:29 PM IST

ஏற்கனவே பிகேஎல் 7 மற்றும் 8 ஆகிய சீசன்களில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சாகர் ரதி, இந்த சீசனிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பக்க பலமாக இருக்கும் விதமாக அஜிங்க்யா பவார் மற்றும் சாஹில் குலியா ஆகியோர் துணை கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள்
பயிற்சியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள்

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தமிழ்நாட்டை மையமாக வைத்து தமிழ் தலைவாஸ் அணி களமிறங்குகிறது. பிகேஎல் 10 தொடரின் முதல் போட்டி குஜராத் ஜெயிண்ட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து முதல் நாளில் நடைபெறும் இரண்டாவது போட்டியாக யு மும்பா - யுபிி யோதாஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதையடுத்து இந்த தொடரில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதி, துணை கேப்டன்களாக அஜிங்க்யா பவார் மற்றும் சாஹில் குலியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் போட்டியில் தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் ஞாயிற்று கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த போட்டியை முன்னிட்டு பயிற்சியாளர் அஷான் குமார் தலைமையில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிகேஎல் 10 சீசனுக்கான தமிழ் தலைவாஸ் முழு அணி:

ரைடர்கள்: அஜிங்க்யா பவார் (லெஃப்ட் ரைடர்), ஹிமான்ஷு நர்வால் (லெஃப்ட் ரைடர்), நரேந்திர கண்டோலா (லெஃப்ட் ரைடர்),

ஹிமான்ஷு துஷிர் (ரைட் ரைடர்), கே. செல்வமணி (ரைட் ரைடர்), விஷால் சாஹல் (ரைட் ரைடர்), நிதின் சிங் (ரைட் ரைடர்), ஜதின் ஃபோகட் (ரைட் ரைடர்), எம். லக்ஷ்மன் (ரைட் ரைடர்), மற்றும் சதீஷ் கண்ணன் (ரைட் ரைடர்)

பிகேஎல் தொடரில் 2017 முதல் தமிழ் தலைவாஸ் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் மூன்று சீசன்கள் தமிழ் தலைவாஸ் அணிக்கு மோசமாக அமைந்த நிலையில், கடந்த சீசனில் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அரையிறுதியில் தோல்வியை சந்தித்தது. இந்த முறை தமிழ் தலைவாஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.