தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tamil Thalaivas: இந்த ஆட்டம் போதுமா? இரண்டு தொடர் தோல்விக்கு பின் யுபி யோதாஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

Tamil Thalaivas: இந்த ஆட்டம் போதுமா? இரண்டு தொடர் தோல்விக்கு பின் யுபி யோதாஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 07, 2024 04:00 AM IST

ப்ளேஆஃப் இடத்துக்கு கடுமான போட்டி நிலவி வரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளுக்கு பிறகு வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது தமிழ் தலைவாஸ்

யுபி யோதாஸ் வீரரை மடக்கி பிடிக்கு தமிழ் தலைவாஸ் வீரர்கள்
யுபி யோதாஸ் வீரரை மடக்கி பிடிக்கு தமிழ் தலைவாஸ் வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், புனேரி பல்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமிருக்கும் நான்கு இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதையடுத்து இந்த தொடரின் இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று முன்னேறிய தமிழ் தலைவாஸ் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது. அதற்கு ஏற்றார் போல் யுபி யோதாஸுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது தமிழ் தலைவாஸ்.

இன்றைய ஆட்டத்தில் முதல் பாதி ரெய்ட் ஆட்டத்தில் இரு அணிகளும் சமநிலை பெற்றது. டேக்களில் தமிழ் தலைவாஸ் முன்னேறியிருந்ததோடு, முதல் பாதியிலும் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதி ரெயிட், டேக்கிள் என தமிழ் தலைவாஸ் அணி தன் வசமாக்கி கொண்டது. முழு ஆட்ட நேர முடிவில் 32-25 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ், யுபி யோதாஸ் அணியை வீழ்த்தி அணிக்கு கண்டிப்பாக தேவைப்பட்ட வெற்றியை பெற்றது.

இரு அணிகள் மோதிக்கொண்ட முதல் போட்டியில் 46-27 என்ற புள்ளிக் கணக்கில் யுபி யோதாஸ் அணியை தமிழ் தலைவாஸ் தோற்கடித்தது. தழுவியது. இன்று நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்று சீசனில், யுபி யோதாஸுக்கு எதிராக இரண்டு போட்டியிலும் வென்றுள்ளது தமிழ் தலைவாஸ்.

இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 15 ரெயிட், 14 டேக்கிள், 2 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் பெறவில்லை.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி 13 ரெயிட், 10 டேக்கிள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட், சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெற்வில்லை.

தமிழ் தலைவாஸ் வீரர் நரேந்தர் ஹோஷியார் 8 ரெயிட், 2 போன்ஸ் புள்ளிகள் என மொத்தம் 10 புள்ளிகளை பெற்றார். அதே போல் யுபி யோதாஸ் வீரர் ககன் கவுடா 4 ரெயிட், 2 போனஸ் என 6 புள்ளிகளை பெற்றார். இவர்கள் இருவரும் தங்களது அணிகளில் டாப் வீரர்களாக உள்ளார்கள்.

ப்ரோ கபடி லீக் 2024 தொடரில் இதுவரை விளையாடியிருக்கும் 19 போட்டிகளில் 8 வெற்றி, 11 தோல்வகளை பெற்றிருக்கும் தமிழ் தலைவாஸ் 45 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. யுபி யோதாஸ் 18 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, 11வது இடத்தில் உள்ளது.

டாப் 6 இடங்களை பிடிக்கும் அணி மட்டுமே ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்கிற நிலையில் தற்போது ஜெய்ப்பூர் பிங்க பேந்தர்ஸ், புனேரி பல்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.

இதையடுத்து தமிழ் தலைவாஸ் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் எஞ்சியிருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது. தமிழ் தலைவாஸ் தனது அடுத்த போட்டியில் உச்சகட்ட பார்மில் இருக்கும் புனேரி பல்தான் அணியை எதிர்கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்