TNPL Players Record: டிஎன்பிஎல் முதல் சீசனில் அதிக ஸ்கோர் பதிவு செய்த டாப் 5 வீரர்கள்
கடந்த 2016 சீசனில் அதாவது முதல் சீசன் டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் யார் யார் என பார்க்கலாம்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும்.
2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.
இன்று 7வது சீசன் போட்டி தொடர் தொடங்குகிறது. கடந்த 2016 சீசனில் அதாவது முதல் சீசன் டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் யார் யார் என பார்க்கலாம்.
என்.ஜெகதீசன்
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய என்.ஜெகதீசன், 8 ஆட்டங்களில் விளையாடி 397 ரன்களை குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 87 நாட் அவுட். பேட்டிங் சராசரி 56.71. மொத்தம் 329 பந்துகளை எதிர்கொண்டு அவர் 397 ரன்களை விளாசினார்.
மொத்தம் 5 அரை சதங்களை முதல் சீசனில் விளாசிய அவர், 42 ஃபோர்ஸ், 9 சிக்ஸர்களை விரட்டினார். இவர் கோவையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 27 வயது ஆகிறது.
கவுஷிக் காந்தி
இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது கவுஷிக் காந்தி. இவர் TUTI பேட்ரியாட்ஸ் அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
மொத்தம் 9 ஆட்டங்களில் விளையாடிய அவர், 260 பந்துகளை எதிர்கொண்டு 366 ரன்களை விளாசினார். இவரது ஸ்டிரைக் ரேட் 140.76 ஆகும். மொத்தம் 3 அரை சதங்களை விளாசிய கவுஷிக், 39 ஃபோர்ஸ், 12 சிக்ஸர்களை பறக்க விட்டார். இவர் திண்டுக்கல் நகரில் பிறந்தவர் ஆவார். வயது 33.
அனிருதா சீதா ராம்
லைகா கோவை கிங்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி முதல் சீசனில் அசத்திய அனிருதா சீதாராம் 8 ஆட்டங்களில் விளையாடி 304 ரன்களை விளாசினார். இவர் 237 பந்துகளை எதிர்கொண்டு இந்த ஸ்கோரை பதிவு செய்தார். 1 அரை சதம் மட்டுமே விளாசிய அவர், 23 ஃபோர்ஸ், 11 சிக்ஸர்களை சிதறடித்தார்.
பாபா அபராஜித்
விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த பாபா அபராஜித், 5 ஆட்டங்களில் விளையாடி 293 ரன்களை விளாசினார்.
இவர் மொத்தம் 167 பந்துகளை எதிர்கொண்டு 25 ஃபோர்ஸ், 16 சிக்ஸர்களை அடித்தார். 1 சதம், 2 அரை சதங்களை பதிவு செய்தார்.
கோபிநாத் கே.எச்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோபிநாத், 9 ஆட்டங்களில் விளையாடி 273 ரன்களை குவித்துள்ள டாப் 6 ரன் ஸ்கோரர்களில் 5வது இடத்தைப் பிடித்தார். இவர் மொத்தம் 213 பந்துகளை எதிர்கொண்டு 2 அரை சதங்களை விளாசியதுடன், 29 ஃபோர்ஸ், 8 சிக்ஸர்களை விரட்டினார்.
முதல் சீசனில் Tuti பேட்ரியாட்ஸ் சாம்பியன் ஆனது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரன்னர்-அப் ஆனது.
இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்று முதல் 7வது சீசன் போட்டி தொடங்குகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குரூப் பெற்றுள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம். நமது தமிழக வீரர்களுக்கு ஆதரவு தரலாம்.
ஹாட்ஸ்டார் செயலியிலும் இந்தத் தொடரை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். கடந்த முறை மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இந்த முறை இன்று முதல் தொடங்கி ஒரு மாத காலம் நடக்கவுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி வரை இப்போட்டி நடக்கவுள்ளது.
மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி, நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
டாபிக்ஸ்