West Indies Cricket: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு
West Indies Women: அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் 19 வயதுக்குட்பட்ட மூன்று நட்சத்திரங்கள்- ஜைதா ஜேம்ஸ், அஷ்மினி முனிசார் மற்றும் டிஜெனபா ஜோசப் ஆகியோர் உள்ளனர். ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் டி20ஐ தொடரில் விளையாடவுள்ளது.
ஒரு நாள் தொடரில் ஓர் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது.
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தலைமை தேர்வாளர் ஆன் பிரவுன்-ஜான் கூறுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி மீண்டும் கட்டமைக்கப்படுகிறது, மேலும் அவர்கள் மூத்த வீராங்கனைகள் மற்றும் இளம் வீராங்கனைகளின் திறமையான சமநிலையுடன் வருகிறார்கள்.
ஒருநாள் தொடரை முடித்த வீராகளை தக்க வைக்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இந்த வீராங்கனைகள் ஃபார்ம் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தி அணியை தொடர் வெற்றியைப் பெறச் செய்தனர்.
"நாங்கள் மறுசீரமைப்பைத் தொடரும்போது, மூத்த வீராங்கனைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வீராங்கனைகளின் கலவையில் ஒரு திறமையான சமநிலையைக் கண்டறிந்துள்ளோம் என்று நாங்கள் நம்புகிறோம். அனுபவம் வாய்ந்த மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட வீராங்கனைகள் ஒன்றிணைத்து சாதிப்பார்கள்" என்று ஆன் பிரவுன் கூறினார்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹேலி மேத்யூஸ் கேப்டனாகவும், ஷெமைன் காம்ப்பெல் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்.
இந்த மூன்று போட்டிகளும் செயின்ட் லூசியா டேரன் சம்மி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டி ஜூலை 4 செவ்வாய்க்கிழமையும், அதைத் தொடர்ந்து ஜூலை 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் போட்டிகளும் நடைபெறுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ஹேலி மேத்யூஸ் (கேப்டன்), ஷெமைன் காம்ப்பெல் (துணை கேப்டன்), ஆலியா அலீன், ஷமிலியா கானல், சினெல் ஹென்றி, அஃபி பிளெட்சர், செர்ரி ஆன் பிரேசர், ஷபிகா கஜ்னாபி, ஜைதா ஜேம்ஸ், ஜெனபா ஜோசப், கியானா ஜோசப், அஷ்மினி முனிசர், ஸ்டாபானி டெய்லர், ரஷாடா வில்லியம்ஸ்.
டாபிக்ஸ்