Sudhir Naik Passes Away: முன்னாள் கிரிக்கெட் வீரர் சுதிர் நாயக் மறைவு
Former India opener Sudhir Naik: மும்பையில் 1945ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிறந்த சுதிர் நாயக்கிற்து தற்போது வயது 78 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பிரபல பயிற்சியாளருமான சுதிர் நாயக் காலமானார். அவருக்கு வயது 78.
1970-71 சீசனில் சுதிர் நாயக் தலைமையிலான மும்பை அணி ரஞ்சிக் கோப்பையை வென்றது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 1974ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.
3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 141 ரன்களும், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 38 ரன்களும் பதிவு செய்திருக்கிறார். இதுதவிர 85 முதல்தர போட்டிகளில் விளையாடி 4376 ரன்கள் எடுத்துள்ளார் சுதிர் நாயக். அதில் 7 சதங்களும், 27 அரை சதங்களும் அடங்கும்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளராக செயல்பட்டார். மும்பை அணியின் தேர்வுக் குழுவின் தலைவராகவும், அதன்பின் வான்கடே ஸ்டேடியத்தின் ஆடுகள பராமரிப்பாளராகவும் சுதிர் பணியாற்றினார்.
மும்பையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், சமீபத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின்போது அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், நேற்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்தது.
மும்பையில் 1945ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிறந்த சுதிர் நாயக்கிற்து தற்போது வயது 78 என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்