Stuart Broad: டெஸ்ட் பந்துவீச்சில் அடுத்த கட்ட பாய்ச்சலில் ஸ்டூவர்ட் பிராட்-இதுவரை 600 விக்கெட்டுகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Stuart Broad: டெஸ்ட் பந்துவீச்சில் அடுத்த கட்ட பாய்ச்சலில் ஸ்டூவர்ட் பிராட்-இதுவரை 600 விக்கெட்டுகள்

Stuart Broad: டெஸ்ட் பந்துவீச்சில் அடுத்த கட்ட பாய்ச்சலில் ஸ்டூவர்ட் பிராட்-இதுவரை 600 விக்கெட்டுகள்

Manigandan K T HT Tamil
Jul 19, 2023 09:13 PM IST

Eng vs Aus 3rd Test: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து ஜெயித்தது. மான்செஸ்டரில் நான்காவது டெஸ்ட் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் ஜெயித்து பவுலிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்டு பிராட்
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்டு பிராட் (Action Images via Reuters)

மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து ஜெயித்தது. மான்செஸ்டரில் நான்காவது டெஸ்ட் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் ஜெயித்து பவுலிங்கை தேர்வு செய்தது.

டேவிட் வார்னர் 32 ரன்களில் நடையைக் கட்டினார். உஸ்மான் கவாஜா விக்கெட்டை ஸ்டூவர்டு பிராட் வீழ்த்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 599-வது விக்கெட் ஆகும். அடுத்து டிராவிஸ் ஹெட் விக்கெட்டை கைப்பற்றினார் அது 600வது விக்கெட் ஆகும்.

இத்தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்களில் மார்க் வுட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.

டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோர் விளையாடி வருகின்றனர். 

இந்தப் போட்டியில் ஜெயித்தால் மட்டுமே தொடரை கைப்பற்ற இங்கிலாந்துக்கு வாய்ப்பு கிட்டும். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி., அணி அபாரமாக மீண்டு வந்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஷஸ் தொடரை ஆஸி., அணி இங்கிலாந்தில் வெல்லவில்லை என்றாலும், வரவிருக்கும் டெஸ்டில் வெற்றி பெற்றால் அந்த சாதனையை முறியடிக்க முடியும்.

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டில் உள்ள ஆடுகளத்தின் மேற்பரப்பு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழ்நிலையை வழங்குகிறது. ஏனெனில் பந்து நன்றாக பேட் மீது வருகிறது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவக்கூடிய போதுமான அளவு பவுன்ஸையும் வழங்கும். ஆட்டம் முன்னேறும்போது சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது.

ஆஸி., அணியில் தொடரில் இதுவரை பெரிய அளவில் சோபிக்காத எடுத்த ஸ்காட் போலண்டை நீக்கிவிட்டுக்கு ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆஸ்திரேலிய கேப்டன் உறுதிப்படுத்தினார்.

கேமரூன் கிரீனுக்காக டாட் மர்பியும் நீக்கப்பட்டுள்ளார். லெவனில் மிட்செல் மார்ஷ் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.