Stuart Broad: 'இத்தோட நிறுத்திகிறேன்' இந்திய அணி பேவரிட் பவுலர் - ஓய்வை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Stuart Broad: 'இத்தோட நிறுத்திகிறேன்' இந்திய அணி பேவரிட் பவுலர் - ஓய்வை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்

Stuart Broad: 'இத்தோட நிறுத்திகிறேன்' இந்திய அணி பேவரிட் பவுலர் - ஓய்வை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 30, 2023 12:45 AM IST

லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆஷஷ் தொடர் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது ஓய்வு முடிவை உறுதிபடுத்தியள்ளார்.

ஓய்வு முடிவை வெளிப்படுத்திய பிறகு இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்
ஓய்வு முடிவை வெளிப்படுத்திய பிறகு இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் (Action Images via Reuters)

லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது ஆஸ்திரேலியாவுக்ுக எதிராக நடைபெற்று வரும் ஆஷஷ்  தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி சர்வதேச போட்டி என தெரிவித்துள்ளார்.

மூன்றாம்  நாள் ஆட்ட நேர முடிவில் பிராட் தனது ஓய்வு முடிவு குறித்து உறுதிபடுத்தியுள்ளார். ஏற்கனவே மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் அணியின் சக வீரர்களான ஜோ ரூட்,  ஜேமி ஆண்டர்சன் ஆகியோரிடம் தெரிவித்திருந்தாராம் பிராட்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிகான கடைசி ஆஷஷ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்துக்கு பின்னர் பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்த ஸ்டூவர்ட் பிராட், "இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து அணிக்கான பேட்ஜை நான் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

கிரிக்கெட்டை நான் எப்போது நேசிக்கிறேன். அற்புதமான இந்த தொடரில் ஒரு பகுதியாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த வாரம் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஷ் டெஸ்டில் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பிராட் வரலாற்றில் இடம் பிடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது சிறந்த பந்துவீச்சாளராகவும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில், சக அணி வீரரான ஜேமி ஆண்டர்சனுக்கு அடுத்தபடியாக பிராட் உள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக  ஒரே ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்த மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். அந்த வகையில் இந்திய அணியின் பேவரிட் பவுலராகவும் இருந்து வந்துள்ளார். 

டெஸ்ட் போட்டிகளில் 602 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் பிராட், தற்போது நடைபெற்று வரும் போட்டியில் கடைசி முறையாக பவுலிங் செய்ய உள்ளார்.

அத்துடன் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டூவர்ட் பிராட் 2, ஆண்டர்சன் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தற்போது 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.