World Cup Qualifiers: 4 இலங்கை வீரர்கள் அரை சதம்-ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஆட்டத்தில் விறுவிறு
ICC Cricket World Cup Qualifiers 2023: நேற்று முதல் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. குரூப் ஏ, குரூப் பி என அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸ் அற்புதமான அரைசதம் அடித்தார்.
இது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது 22வது அரை சதம் ஆகும்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் நடக்கவுள்ளது.
இந்தப் போட்டியில் ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் தேர்வாகிவிட்டன. எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடந்து வருகிறது.
நேற்று முதல் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. குரூப் ஏ, குரூப் பி என அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே வென்றது. மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இன்று புலவாயோ குயீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் 3வது ஆட்டம் நடக்கிறது. இதில் இலங்கையும், ஐக்கிய அரபு அமீரகமும் மோதி வருகிறது.
குரூப் பி பிரிவில் இந்த அணிகள் இடம்பிடித்துள்ளன. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து தனது இன்னிங்ஸை இலங்கை விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 355 ரன்களை குவித்தது.
அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 4 பேர் அரை சதம் விளாசினர். ஓபனிங் பேட்மேனான பதும் நிசங்கா 76 பந்துகளில் 57 ரன்களும், கருணாரத்னே 54 பந்துகளில் 52 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களம் புகுந்த விக்கெட் குசால் மென்டிஸ் 63 பந்துகளில் 78 ரன்களும், சமரவிக்ரமா 64 பந்துகளில் 73 ரன்களும் விளாசினர்.
குசால் மென்டிஸுக்கு இது 22 வது அரை சதம் ஆகும்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழக்க, அசலங்கா 48 ரன்கள் விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கேப்டன் ஷனகா, 1 ரன்னிலும், தனஞ்செய டி சில்வா 5 ரன்னிலும் நடையைக் கட்டினர்.
ஹசரங்கா 23 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவ்வாறாக அந்த அணி 355 ரன்களை குவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அலி நசீர் 2 விக்கெட்டுகளையும், முஸ்தபா, ஆயான் கான், பாசில் ஹமீது ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
டாபிக்ஸ்