SL vs PAK 1st Test: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
Pakistan: நோமன் அலி, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அகா சல்மான், ஷஹீன் அஃப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சுருட்டினர்.
பாகிஸ்தான்-இலங்கை இடையேயான முதல் டெஸ்டில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாஸ் ஜெயித்த இலங்கை பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் 312 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்ஸில் 461 ரன்களை குவித்தது பாகிஸ்தான். இலங்கையில் முதல் முறையாக பாகிஸ்தான் வீரர் ஒருவர் இரட்டை சதம் பதிவு செய்தார். அவர் சாத் ஷகீல் ஆவார். அவர் 208 ரன்களை விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
இதையடுத்து 149 ரன்கள் பின்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 4வது நாளில் 279 ரன்களில் சுருண்டது.
பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்கள் தள்ளாடினர். தனஞ்செய டி சில்வா மட்டும் அரை சதம் விளாசினார். அவர் 118 பந்துகளில் 82 ரன்களை எடுத்திருந்தார்.
ஆர்.மென்டிஸ் 42 ரன்களும், நிஷான் மதுஷ்கா 52 ரன்களும் பதிவு செய்தனர்.
நோமன் அலி, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அகா சல்மான், ஷஹீன் அஃப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சுருட்டினர்.
இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 4வது நாளின் முடிவிலேயே பாகிஸ்தான் விளையாடத் தொடங்கிவிட்டது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் இன்னும் ஒரு நாள் எஞ்சியிருப்பதாலும், இலக்கு குறைவாக இருப்பதாலும் பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
2வது இன்னிங்ஸில் ஓபனிங் பேட்ஸ்மேன் அப்துல்லா ஷஃபிக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இமாம்-உல்-ஹக், ஷான் மசூத் ஆகியோர் களத்தில் இருந்து விளையாடி வருகின்றனர்.
முன்னதாக, நேற்றைய ஆட்ட நேர முடிவில், இரட்டை சதம் விளாசி இருந்தார் ஷகீல். அவர் இலங்கையில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் ஆனார். 361 பந்துகளில் 208 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதுவே அவருக்கு அயல்நாட்டு மண்ணில் முதல் சதம் ஆகும். இதற்கு முன்பு சொந்தமண்ணில் மட்டுமே சதம் விளாசியிருக்கிறார்.
கேப்டன் பாபர் அஸாம் 13 ரன்களில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அகமது 17 ரன்களிலும், இமாம்-உல்-ஹக் 1 ரன்னிலும் நடையைக் கட்டினர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்