Sreeja Akula: உலக டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம்! சாதித்த இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sreeja Akula: உலக டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம்! சாதித்த இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா

Sreeja Akula: உலக டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம்! சாதித்த இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 25, 2024 01:27 PM IST

லாகோஸில் நடைபெற்ற த்ரில்லர் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சீனாவின் டிங் யிஜியை 4-1 என்ற கணக்கில் தோல்வியடைய செய்து WTT Contender தொடர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம் வென்றார். இதனுடன் இரட்டையர் பிரிவிலும் பட்டம் வென்று ஸ்ரீஜா சாதித்துள்ளார்.

உலக டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம் வெனறு சாதித்த இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா
உலக டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம் வெனறு சாதித்த இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா (AP)

நைஜிரியா நாட்டிலுள்ள லாகோஸ் நகரத்தில் நடைபெற்ற இந்த தொடரில் ஸ்ரீஜா, வெற்றி பெற்று இந்த பெருமையை அடைந்துள்ளார்.

சீனா வீராங்கனைக்கு எதிராக ஆதிக்கம் அய்ஹிகா முகர்ஜி, சீனா வீராங்கனை

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் சீனா வீராங்கனை டிங் ஈஜி என்பவரை எதிர்கொண்டார். இந்த போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீஜா 4-1 என்ற செட்களில் வெற்றி பெற்றார். மொத்தம் ஐந்து சுற்றுகளிலும் ஸ்ரீஜா, 10-12, 11-9, 11-6, 11-8, 11-6 என புள்ளிகளை பெற்றார்.

முதல் சுற்றை தவறவிட்டபோதிலும், அடுத்தடுத்த சுற்றுகளில் கம்பேக் கொடுத்த ஸ்ரீஜா, அனைத்தையும் தன்வசமாக்கினார்.

இந்திய வீராங்கனைக்கு எதிராக வெற்றி

முன்னதாக அரையிறுதி ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீராங்கனையான சுதிர்தா முகர்ஜியை வீழ்த்தினார், ஸ்ரீஜா அகுலா. அரையிறுதி போட்டியில் ஸ்ரீஜா அகுலா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் இன்னொரு இந்திய வீராங்கனை அய்ஹிகா முகர்ஜி, சீனா வீராங்கனை டிங் ஈஜி ஆகியோர் மோதினார்கள். இந்த போட்டியில் 2-3 என்ற கணக்கில் அய்ஹிகா முகர்ஜி தோல்வி அடைந்ததால் சீனாவின் டிங் ஈஜி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஆனால் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீஜாவுக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவிலும் ஸ்ரீஜா வெற்றி

ஒற்றையர் பிரிவு போட்டிக்கு முன்னர், மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கிரிஷ் காமத் ஜோடி மற்றொரு இந்திய ஜோடியான யஷஸ்வினி கோர்படே மற்றும் தியா பராக் சித்தாலே ஜோடிக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 11-9, 11-6, 12-10 என்ற நேரடி செட்களில் ஸ்ரீஜா - அர்ச்சனா ஜோடி வெற்றி பெற்றது.

ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்த ஜோடி அரையிறுதியிலும் மற்றொரு இந்திய ஜோடியான அய்ஹிகா முகர்ஜி - சுதிர்தா முகர்ஜி ஜோடியை வென்றது.

டாப் 25 இடத்தில் நுழைந்த ஸ்ரீஜா

சிறப்பான பார்மில் இருந்து வரும் ஸ்ரீஜா அகுலா, ஒற்றையர் பிரிவில் மற்றும் இரட்டையர் பிரிவில் என இரண்டு பட்டங்களை வென்ற முதல் இந்தியராகவும் உள்ளார். வெற்றி மேல் வெற்றியை குவித்திருக்கும் ஸ்ரீஜா, உலக டேபிள் டென்னிஸ் ரேங்கிங்கில் டாப் 25 இடத்துக்கு முன்னேறியுள்ளார். தற்போது ஸ்ரீஜா, உலகின் நம்பர் 19 வீராங்கனையாக மாறியுள்ளார்.

முதல் முறையாக நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் இந்தியா போட்டியிட இருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.