Squash world cup 2023: ஹாட்ரிக் வெற்றி! அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொள்ளும் இந்தியா
இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று முழு ஆதிக்கம் செலுத்து வரும் நிலையில், அரையிறுதியில் மலேசியா அணியை எதிர்கொள்ள உள்ளது.
நான்காவது ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை ராயாப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் மால் அவென்யூவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இதில் குரூப் பி பிரிவில் இருக்கும் இந்திய அணி முதல் நாளில் ஹாங்காங் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதன்பின்னர் இரண்டாவது நாளில் தென்ஆப்பரிக்கா அணியையும் 4-0 என வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியது. அத்துடன் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இதைத்தொடர்ந்து மூன்றாவது நாளில் ஜப்பானை எதிர்கொண்ட இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன் இந்த தொடரில் தோல்வி அடையாத அணியாக இருந்து வருகிறது.
ஜப்பானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஜப்பானின் சடோமி வாடாநபேவை 2-7, 7-4,3-7,7-5,7-5 என்ற கணக்கில் கடுமையாக போராடி வெற்றி பெற்றார்.
செளரவ் கோஷல், யுனோசுகே சுகுவே என்பவரை 7-6,6-7,7-4,3-7,7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
அதேபோல் தன்வீ கன்னாவும், அ்காரி மிடோரிகாவா என்பவரை 7-4,7-1, 7-1 என முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தினார்.
இளம் வீரர் அபேய் சிங் 6-7,6-7,2-7 என்ற கணக்கில் டோமோடாகா என்டோ என்பவரிடம் வீழ்ந்தார். இதுதான் இந்த தொடரில் இந்திய அணி வீரர் பெற்ற முதல் தோல்வியாக அமைந்தது.
குரூப் பி பிரிவில் அனைத்து போட்டிகளையும் வென்ற இந்தியா ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகளை WORLDSQUASH.TV என்ற தளத்தில் இலவசமாக பார்க்கலாம். ஜியோ சினிமாவிலும் இந்தப் போட்டி ஸ்டீரிம் ஆகிறது.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்