Squash World Cup 2023: அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Squash World Cup 2023: அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா

Squash World Cup 2023: அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 15, 2023 01:32 PM IST

ஸ்குவாஷ் உலகக் கோப்பை ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி, இரண்டாவது வெற்றியை பெற்றிருப்பதுடன் அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் செளரவ் கோஷல் (இடது), தன்வீ கன்னா (வலது)
தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் செளரவ் கோஷல் (இடது), தன்வீ கன்னா (வலது)

பி பிரிவில் உள்ள இந்திய அணி முதல் நாளில் நடைபெற்ற போட்டியில் ஹாங்காங் அணியில் 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தென்ஆப்பரிக்கா அணியை எதிர்கொண்டது இந்திய அணி.

இந்தப் போட்டியிலும் இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் தொடச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்றிருக்கும் இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தன்வீ கன்னா, ஹேலே வார்ட் என்பவரை 7-4, 7-2, 3-7, 7-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதில் ஒரேயொரு போட்டியில் மட்டும் தன்வீ கன்னா தோல்வியை தழுவினார்.

செளரவ் கோஷல், டெவால்ட் வான் நீகெர்க்கை 7-6, 7-4, 7-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டியில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தினார் செளரவ் கோஷல்.

மூன்றாவது ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 7-4, 7-3, 3-7, 7-1 என்ற கணக்கில் லிசெல்லே முல்லரை வீழ்த்தினார்.

கடைசி போட்டியில் அபேய் சிங் 7-4, 3-7, 7-6, 7-5 என்ற கணக்கில் ஜீன்-பியர் பிரிட்ஸை வீழ்த்தி நிலையில் இந்தியா 4 போட்டிகளிலும் முழுவதுமாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளை பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பி பிரிவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக 10 புள்ளிகளுடன் ஜப்பான் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று மாலை 6 மணிக்க நடைபெறுகிறது. 

இந்தப் போட்டியை WORLDSQUASH.TV என்ற தளத்தில் இலவசமாக பார்க்கலாம். ஜியோ சினிமாவிலும் இந்தப் போட்டி ஸ்டீரிம் ஆகிறது.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.