HT Sports Special: Alter Ego, ஆக்ரோஷத்தால் அபராதங்கள்! தென்ஆப்பரிக்கா கிரிக்கெட்டில் சர்ச்சைகளின் நாயகன் ஆண்ட்ரே நெல்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: Alter Ego, ஆக்ரோஷத்தால் அபராதங்கள்! தென்ஆப்பரிக்கா கிரிக்கெட்டில் சர்ச்சைகளின் நாயகன் ஆண்ட்ரே நெல்

HT Sports Special: Alter Ego, ஆக்ரோஷத்தால் அபராதங்கள்! தென்ஆப்பரிக்கா கிரிக்கெட்டில் சர்ச்சைகளின் நாயகன் ஆண்ட்ரே நெல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 15, 2023 06:15 AM IST

வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், அச்சுறுத்தும் பவுன்சர்கள் என பேட்ஸமேன்களை மிரட்டும் பவுலராக இருந்து வந்தவர் நெல். கிரிக்கெட் ஆடிய காலத்தில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வீரராகவும் இவர் இருந்துள்ளார்.

தென் ஆப்பரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரே நெல்
தென் ஆப்பரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரே நெல்

பேட்ஸ்மேன்கள் அதிரடியான பவுன்சர்களால் அச்சுறுத்த கூடியயவராக இருந்த நெல், தென்ஆப்பரிக்கா கிரிக்கெட்டில் சர்ச்சைகளின் நாயகனாக வலம் வந்துள்ளார். தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் அணிக்காக 2001 முதல் 2008 வரை இவர் விளையாடியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் பேட்ஸ்மேனான பிரெய்ன் லாராவுக்கு தொல்லை தந்த பவுலராக இவர் இருந்துள்ளார். லாராவை மொத்தம் 8 முறை அவுட்டாக்கியுல்ளார். அந்நிய மண்ணில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்ட நெல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் விக்கெட் வீழ்த்தும் மெஷினாகவே இருந்துள்ளார்.

தென்ஆப்பரிக்கா பவுலர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 11வது பவுலர் என்ற பெருமை பெற்றிருக்கும் நெல், சர்ச்சைகளின் நாயகனாகவும் வலம் வந்துள்ளார். பலமுறை ஐசிசி விதிமீறல்களில் ஈடுபட்ட அபராதம் விதிக்கப்பட்ட வீரராக இருந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வருவதற்கு முன்பே, உள்ளூர் போட்டியில் தென்ஆப்பரிக்காவின் முக்கிய பவுலராக இருந்து வந்த ஆலன் டொன்ல்டுக்கு மிரட்டலான பவுன்சரை வீசி ஹெட்லைனில் இடம்பிடித்தார். பின்னர் தான் தனது பயிற்சியாளர் அறிவுறுத்தலின் பேரில் நெல் இப்படி செய்தது தெரியவந்தது.

இதற்கு அடுத்தபடியாக வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கஞ்சா பிடித்தது. 2003இல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், தென்ஆப்பரிக்கா ஏ அணிக்காக விளையாடியபோது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது என சர்ச்சைகளில் சிக்கினார்.

வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணத்தின்போது கிறிஸ் கெய்ல், பிரெய்ன் லாரா ஆகியோர் பார்த்து ஆட்சோபனை தெரிவிக்கும் விதமாக முகபாவனைகளை வெளிப்படுத்தி மேட்ச் ரெப்ரி வரை பஞ்சாயத்துக்கு சென்று அபராதம் விதிக்கப்பட்டார்.

மென்மையான ராட்சசன் என் நெல்லை குறிப்பிடும் விதமாக அவரது செயக்கைகள் இருந்து வந்த நிலையில், அவரது Alter Ego குணம் பல்வேறு சர்ச்சைகளிலும் அவரை சிக்க வைத்துள்ளது. இப்படிப்பட்டவரையே வெறுப்பேற்றவர் லிஸ்டில் இந்திய பவுலர் ஸ்ரீசாந்த் இருந்துள்ளார்.

2007 தென்ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தில் நெல் பந்தில் சிக்ஸர் அடித்து, அவரை நோக்கி பேட்டை சுழற்றியவாறு ஓடி வந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வெறுப்பேற்றினார் ஸ்ரீசாந்த். இந்திய கிரிக்கெட் வீரர் வெளிப்படுத்திய மோசமான செய்கையாக இது இருந்து வருகிறது.

2009இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நெல், பின்னர் 2010ஆம் ஆண்டில் ஒரு முறை தற்கொலை முயற்சியும் செய்துள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான எசெக்ஸ் அணி பவுலிங் பயிற்சியாளர் இருந்து வந்த நெல், 2021இல் அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளூர் அணிகளுக்கான பவுலிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

ஐபிஎல் போட்டிகளில் 2008 சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரராக இருந்த டுவெய்ன் பிராவோ தேசிய அணிக்காக விளையாட பாதியிலேயே விலகியபோது, மாற்று வீரராக ஆண்ட்ரே நெல் களமிறக்கப்பட்டார்.

தென்ஆப்பரிக்கா அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் 123 விக்கெட்டுகள், 79 ஒரு நாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டு சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அச்சுறுத்தலான பவுலிங்கால் டாப் பேட்ஸ்மேன்களை மிரட்டிய பவுலரான ஆண்ட்ரே நெல் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.