Henry Williams: இந்தியாவுக்கு எதிராக மேட்ச் பிக்ஸிங்! குரோனி மீது பொய் வாக்குமூலம் - தண்டனை பெற்ற முதல் வீரர்
தென்ஆப்பரிக்கா முன்னாள் கேப்டன் ஹான்சி குரோனியே சொன்னதுபடி மேட்சி பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்து, ஆறு மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை பெற்றவர் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி வில்லியம்ஸ்.
தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் அணிக்காக 7 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹென்றி வில்லியம்ஸ். உள்ளூர் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் ஏராளமாக இவர் விளையாடியுள்ளார்.
தேசிய அணிக்காக குறைவான போட்டிகளில் பங்கேற்றபோதிலும், சர்வதேச அளவில் தனது அணி மற்றும் அணியின் கேப்டன் மீது தலை குனிவை ஏற்படுத்திய வீரராக இருந்துள்ளார். பின்னாளில் தனது வாக்குமூலம் குறித்து அந்தர் பல்டியும் அடித்தார்.
மேட்ச் பிக்ஸிங்காக தண்டிக்கப்பட்ட வீரர்கள் ஒருவராக இருந்தவர் ஹென்றி வில்லியம்ஸ். 2000ஆவது ஆண்டு தென்ஆப்பரிக்கா அணியின் இந்திய சுற்று பயணத்தின்போது மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அப்போதைய தென்ஆப்பரிக்கா கேப்டன் ஹான்சி குரோனிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதில் ஹான்சி குரோனி தனது அணி வீரர்களான ஹெர்சல் கிப்ஸ், ஹென்றி வில்லியம்ஸ்ஆகியோரை எதிரணிக்கு சாதகமாக விளையாடுமாறு கூறி, அவர்களுக்கு பணம் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
ஹென்றி வில்லியம்ஸ் தனது 10 ஓவரில் 50 ரன்களுக்கு மேல் விட்டுத்தர வேண்டும் என ஒப்புக்கொண்டு குரோனியிடம் பணம் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் பிக்ஸிங் நடைபெற்றதாக கூறப்படும் போட்டியில் 11 பந்துகள் மட்டுமே வீசிய வில்லியம்ஸ் காயம் காரணமாக வெளியேறினார்.
இந்த சூழ்நிலையில் பிக்ஸிங்கில் ஈடுபட முயற்சித்த குற்றத்தை ஒப்பக்கொண்ட வில்லியம்ஸ்க்கு ஆறு மாத காலம் தடை விதிக்கப்பட்டது. அவருடன் பிக்ஸிங் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கிப்ஸுக்கு 6 மாத கால தடையும், இவர்களை பிக்ஸிங்கில் ஈடுபடுத்திய குரோனிக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.
இந்த தடையின்போது 30களில் இருந்த ஹென்றி வில்லியம்ஸ் தடைக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் பக்கம் தலைவிரிக்கவில்லை. 2003-04 வரை தொடர்ந்து முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.
தற்போது தென்ஆப்பரிக்க உள்ளூர் அணிகளில் ஒன்றான போலாந்து அணியின் பவுலிங் பயிற்சியாளராக உள்ளார் ஹென்றி வில்லியம்ஸ்.
இந்த பிக்ஸிங் விவகாரத்தில் சில ஆண்டுகள் கழித்து தனது வாக்குமூலம் தொடர்பாக அப்படியே அந்தர் பல்டி அடித்தார் வில்லியம்ஸ். அதில் பிக்ஸிங் தொடர்பாக கிங்ஸ் கமிஷன் நடத்திய விசாரணையில் தான் பொய் கூறியதாகவும், குரோனிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு மிரட்டப்பட்டதால் அப்படி சொன்னதாகவும் கூறி ஷாக் கொடுத்தார்.
அத்துடன், "நீண்ட காலம் ஆன இந்த விஷயத்தில் நான் உண்மையை மறைக்க விரும்பவில்லை. அமைதியை பெறவும், எனக்கு நடந்த அனைத்து விஷயங்களை மறக்கவும் இதை சொல்கிறேன்" என்றார்.
மேட்ச் பிக்ஸிங்காக என தண்டனை பெற்ற முதல் முறையாக தண்டனை பெற்ற வீரர்களில் ஒருவராக இருக்கும் ஹென்றி வில்லியம்ஸ் இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்