SL vs AFG: முக்கிய போட்டியில் ஆப்கானிஸ்தானை ஊதி தள்ளிய இலங்கை - தொடரை வென்று சாதனை
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sl Vs Afg: முக்கிய போட்டியில் ஆப்கானிஸ்தானை ஊதி தள்ளிய இலங்கை - தொடரை வென்று சாதனை

SL vs AFG: முக்கிய போட்டியில் ஆப்கானிஸ்தானை ஊதி தள்ளிய இலங்கை - தொடரை வென்று சாதனை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 07, 2023 06:53 PM IST

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்று கோப்பையை தட்டி சென்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இலங்கை அணி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கம்பேக் கொடுத்த இலங்கை 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து இலங்கை பெளலங்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 22.2 ஓவரில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆப்கானிஸ்தானில் அதிகபட்சமாக முகமது நபி 23, இப்ராஹிம் ஸட்ரன் 22, குல்பாதின் நயிப் 20 ரன்கள் எடுத்தனர்.

இன்றைய போட்டியில் பெளலிங் செய்த அனைத்து பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். சமீரா 4, ஹசரங்கா 3, லஹுரு குமாரா 2, மகேஷ் தீக்‌ஷனா 1 விக்கெட்டை எடுத்தனர். ஹசரங்கா வெறும் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

117 ரன்கள் என எளிய இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி, 16 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இலங்கை அணி வீரர் துஷ்மந்தா சமீரா வென்றார். இந்த தொடரில் மொத்த 6 விக்கெட்டை வீழ்த்தினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.