Madurai vs Nellai: மதுரை கேப்டன் அசத்தல் அரை சதம்-3 விக்கெட்டுகளை எடுத்த நெல்லை பவுலர்
TNPL 3rd Match: 120 பந்துகளில் 127 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை விளையாடவுள்ளது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் மதுரை பேந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று கோயம்புத்தூரில் விளையாடி வருகிறது. பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.
மதுரை அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய மதுரை பேந்தர்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் எஸ்.கார்த்திக் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும், மதுரை அணி கேப்டனும் மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனுமான ஹரி நிஷாந்த், சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.
இந்த சீசனில் மதுரை அணியின் முதல் ஆட்டத்திலேயே அரை சதம் விளாசியிருக்கிறார் ஹரி நிஷாந்த். அவரது விக்கெட்டை மோகன் பிரசாத் கைப்பற்றினார்.
கே.தீபன் லிங்கேஷ் 6 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றினார். அவரது விக்கெட்டையும் மோகன் பிரசாத் கைப்பற்றினார்.
பின்னர், ஜெகதீசன் கவுஷிக்கையும் 12 ரன்களில் காலி செய்தார் மோகன் பிரசாத். நெல்லை பவுலர் மோகன் பிரசாத், 4 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.
கோயம்புத்தூர் வெயில் கொளுத்தி எடுத்தது. இருப்பினும் ரசிகர்கள் கிரிக்கெட்டை ஆவலுடன் ரசித்து பார்த்து வருகின்றனர்.
இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது நெல்லை ராயல் கிங்ஸ். Fancode செயலியில் இந்தப் போட்டியை நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
2018இல் மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வெல் வேண்டும் என்ற முனைப்புடன் நிச்சயம் விளையாடும்.
2018இல் மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் நிச்சயம் விளையாடும்.
கடந்த ஆண்டு பிளே-ஆஃப் சுற்றுக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி முன்னேறியது. இரண்டாவது குவாலிஃபையரில் லைகா கோவை கிங்ஸிடம் தோற்றது. இதனால் பைனலுக்கு செல்லும் வாய்ப்பு பறிபோனது.
அனுபவம் வாய்ந்த அருண் கார்த்திக் நெல்லை அணியின் கேப்டனாக உள்ளது கூடுதல் பலம். இந்த ஆண்டாவது முதல் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற உற்சாகத்துடன் நெல்லையும் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்