Madurai vs Nellai Preview: முன்னாள் சாம்பியன் மதுரையை சந்திக்கும் நெல்லை!
Madurai Panthers: 2018இல் மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வெல் வேண்டும் என்ற முனைப்புடன் நிச்சயம் விளையாடும்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று கோயம்புத்தூரில் விளையாடுகிறது. பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
இன்றைய தினம் 2 ஆட்டங்கள் நடக்கின்றன.
மற்றொரு ஆட்டம் இரவு 7.15 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கிறது. அந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி ஆகிய அணிகள் மோதுகின்றன.
மதுரை அணி, இந்த சீசனில் தனது முதல் லீக் ஆட்டத்தில் நெல்லையை எதிர்கொள்கிறது. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரியில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
கடந்த சீசனில் மதுரை அணி 5 ஆட்டங்களில் ஜெயித்து பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. எலிமினேட்டரில் லைகா கோவை கிங்ஸிடம் தோல்வியடைந்தது.
இந்த சீசனில் சிறப்பாக விளையாட வேண்டும் என முனைப்பில் உள்ளனர். ஹரி நிஷாந்த் மதுரை பாந்தர்ஸ் அணியை வழிநடத்துகிறார்.
2018இல் மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் நிச்சயம் விளையாடும்.
இதனிடையே, கடந்த ஆண்டு பிளே-ஆஃப் சுற்றுக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி முன்னேறியது.
இரண்டாவது குவாலிஃபையரில் லைகா கோவை கிங்ஸிடம் தோற்றது. இதனால் பைனலுக்கு செல்லும் வாய்ப்பு பறிபோனது.
அனுபவம் வாய்ந்த அருண் கார்த்திக் நெல்லை அணியின் கேப்டனாக உள்ளது கூடுதல் பலம். இந்த ஆண்டாவது முதல் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற உற்சாகத்துடன் நெல்லை களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
பகலில் நடக்கும் ஆட்டம் என்பதால் எஸ்என்ஆர் கல்லூரி மைதானம் ஸ்பின்னர்களுக்கு ஏற்ற ஆடுகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெயில் 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
மதுரை பாந்தர்ஸ் அணியினர் விவரம்
ஹரி நிஷாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கவுசிக், க்ரிஷ் ஜெயின், பாலு சூர்யா, வாஷிங்டன் சுந்தர், எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஸ்வப்னில் சிங், ஷிஜித் சந்திரன், முருகன் அஸ்வின், வி.ஆதித்யா, வி.கவுதம்.
நெல்லை ராயல் கிங்ஸ்
அருண் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராஜகோபால், லக்ஷ்மிஷா சூர்யபிரகாஷ், நிரஞ்சன், ரித்திக் ஈஸ்வரன், ஆதித்யா அருண், என்.எஸ்.ஹரீஷ், அஸ்வின் கிறிஸ்ட், சோனு யாதவ், சந்தீப் வாரியர், எம்.பொய்யாமொழி.
டாபிக்ஸ்