Shubman Gill: Unlucky கில்! பீல்டர் விரலை விட்டு வெளியேறி புற்களில் பட்ட பந்து - அவுட் கொடுத்த ராசியில்லாத அம்பயர்
மிக பெரிய இலக்கை சேஸ் செய்வதற்கு ஏற்ப ரோஹித் - கில் ஜோடி இணைந்து நல்ல தொடக்கத்தை தந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக கில் அவுட்டானார். அவரது விக்கெட்டும் சர்ச்சையில் கிளப்பும் விதமாக உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா அணி 444 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்திய அணிக்கு 4 செஷன்கள் மீதமுள்ள நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்வதற்கு ஏற்ப ரோஹித் - கில் ஜோடி அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர்.
ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்கு சாதகமாக இருந்த நிலையில் அதை இருவரும் நன்கு பயன்படுத்தி ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஆட்டத்தின் 7வது ஓவரை போலாந்து வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட கில், எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆக அதை டிபெண்ட் செய்ய முயன்று அவுட் சைடு எட்ஜ் ஆக, மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த க்ரீன் பிடித்த ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார். க்ரீன் கேட்ச் பிடித்து பினிஷ் செய்யும்போது பந்தை தரையில் வைத்தது போல் தெரிந்த நிலையில் மூன்றாவது அம்பயரிடம் ரிவியூ பார்க்கப்பட்டது.
இதில் க்ரீன் கேட்சை தெளிவாக பிடித்திருந்தாலும், அடுத்த விநாடியில் புற்களில் படும் விதமாக விரல்கள் கீழே வைத்து எழும்பியுள்ளார். அப்போது பந்தும் லேசாக வெளியேறி தரையில் பட்டிருப்பது தெரிந்தது. இதை மூன்றாவது நடுவரும் தெரிவித்தபோதிலும், அவுட் என சிக்னல் தெரிவித்து ஷாக் கொடுத்தார்.
அதிர்ஷ்ட காற்று கில் பக்கம் விசாத நிலையில் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினர். நன்றாக பேட் செய்து ரன் குவித்த கில் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இந்த போட்டியின் மூன்றாவது நடுவராக இருப்பவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ. இவர்தான் 2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து மோதிய அரையிறுதி போட்டியில் அம்பயராக இருந்தார். இவர் இடம்பெறும் போட்டிகளில் இந்தியா அதிகமுறை தோல்வியை தழுவியுள்ளது. எனவே இந்தியாவுக்கு ராசியில்லாத அம்பயர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் எடுத்த கில் அவுட் தொடர்பான முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கில் அவுட்டுக்கு எதிராக #NOTOUT என்ற ஹேஷ்டாக்கில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்