Shardul Thakur: Legendகள் லிஸ்டில் இணைந்த ஷர்துல் தாக்கூர்! இப்போ புரியுதா ஏன் இவரை Lord என அழைக்கிறார்கள்..!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Shardul Thakur: Legendகள் லிஸ்டில் இணைந்த ஷர்துல் தாக்கூர்! இப்போ புரியுதா ஏன் இவரை Lord என அழைக்கிறார்கள்..!

Shardul Thakur: Legendகள் லிஸ்டில் இணைந்த ஷர்துல் தாக்கூர்! இப்போ புரியுதா ஏன் இவரை Lord என அழைக்கிறார்கள்..!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 09, 2023 11:54 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்து, இந்திய அணி பாலோ ஆன் ஆவதை தடுக்க முக்கிய காரணமாக அமைந்தார் பவுலிங் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர். இதன்மூலம் அவர் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசிய ஷர்துல் தாக்கூர் ஆஃப் சைடில் பவுண்டரி அடித்த காட்சி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசிய ஷர்துல் தாக்கூர் ஆஃப் சைடில் பவுண்டரி அடித்த காட்சி (AP)

இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 89 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் எடுத்துள்ளார். முக்கியமான கட்டத்தில் பேட் செய்ய வந்த அவர் ரஹானேவுடன் இணைந்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதன் காரணமாக இந்திய அணி பாலோ ஆன் ஆவது தவிர்க்கப்பட்டது.

ஷர்துல் தாக்கூர் தனது இன்னிங்ஸில் 109 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்கள் விளாசினார். இதில் அவர் 6 பவுண்டரிகளை அடித்தார். பவுலிங்கிலும் அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஷர்துல் தாக்கூர் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸில் அரைசதம் விளாசியுள்ளார். இதன்மூலம் கிரிக்கெட் ஜாம்பவான்களான டான் பிராட்மேன், ஆலன் பார்டர் ஆகியோருக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக ஓவல் மைதானத்தில் மூன்று முறை அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் 2019ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைமுறைக்கு வந்த பின்னர், இங்கிலாந்து ஆடுகளங்களில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தில் பேட் செய்ய வந்து அதிக முறை அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்றொரு சாதனையும் புரிந்துள்ளார் ஷர்துல் தாக்கூர்.

இதற்கு முன்னதாக 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார் தாக்கூர். இதையடுத்து தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முக்கிய இன்னிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷர்துல் தாக்கூர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அடித்திருக்கும் நான்கு அரைசதங்களும் அந்நிய மண்ணில் அடிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் ஷர்துல் தாக்கூரை லார்ட் தாக்கூர் என்ற அழைக்கிறார்கள்.

தன்னை இப்படி அழைப்பதற்கான காரணத்தை தனது அற்புதமான பேட்டிங் மூலம் நியாயபடுத்தியுள்ளார் ஷர்துல் தாக்கூர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.