Shane Warne Biopic: பலான காட்சி படப்பிடிப்பில் பலத்த அடி - மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வார்னே பயோபிக் நடிகர்கள்
மறைந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் பயோபிக் சீரிஸில் இடம்பிடித்த நெருக்கமான காட்சியில் நடித்தபோது காயமடைந்து, அதில் நடித்த நடிகர் மற்றும் நடிகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2022 மார்ச் 4ஆம் தேதி ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார். விடுமுறையை கொண்டாட தாய்லாந்து சென்றிருந்த வார்னே இறந்த நிலையில் அவரது அறையில் இருந்துள்ளார்.
இதையடுத்து வார்னே வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பயோபிக் சீரிஸ் ஒன்று உருவாகி வருகிறது. இதில் வார்னே கதாபாத்திரத்தில் அலெக்ஸ் வில்லயம்ஸ், வார்னேவின் முன்னாள் மனைவி சிமோன் காலஹான் கதாபாத்திரத்தில் நடிகை மார்னி கென்னடி நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நடிகர்களாக உள்ளனர்.
இதையடுத்து வார்னே படத்தில் நெருக்கமான பலான காட்சி ஒன்றில் நடித்தபோது இருவருக்கும் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக நடிகை மார்னி கென்னடி பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
"நானும் சக நடிகர் அலெக்ஸ் வில்லயம்ஸும் கோரிடாரில் நெருக்கமாக நடந்து படுக்கையறை நோக்கி வர வேண்டும். பின்னர் இருவரும் படுக்கையை நோக்கி முத்தமிட்டவாறு விழ வேண்டும். ஆனால் நாங்கள் படுகையில் விழாமல் தவறி கீழே விழுந்துவிட்டோம்.
இதன் விளைவாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டோம். அலெக்ஸுக்கு தலையிலும், எனக்கு கை மணிக்கட்டிலும் பேண்டேஜ் போட வேண்டிய நிலைமை ஏற்பட்டது" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த படம் உருவாவதற்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு குரல்களும் எழும்பியுள்ளது. வார்னே இறந்து ஒரு வருடம்தான் ஆகியிருக்கும் நிலையில் இவ்வளவு அவசரமாக பயோபிக் எடுப்பது, அவரது சாதனைக்கு மரியாதை கொடுக்கும் விதமாக இல்லாமல் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ஏற்கனவே ஷேன் வார்னே குறித்த பயோபிக் எடுப்பது பற்றி 2020ஆம் ஆண்டிலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ஷேன் என்ற பெயரில் டாக்குமெண்டரி சீரிஸ் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது திட்டமிட்டபடி படம் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான வீரராக திகழ்ந்த ஷேன் வார்னே ஆஸ்திரேலியா அணிக்காக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் சேர்த்து 1,001 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓய்வுக்கு பின்னர் டி20 போட்டிகளில் கவனம் செலுத்திய வார்னே ஐபிஎல். பிக் பேஷ் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார்.
மொத்தமாக 73 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னே, 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெறும் பவுலராக மட்டுமில்லாமல் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அவர் ஜொலித்துள்ளார். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக இருந்து வந்த வார்னே 52வது வயதில் இறந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்