PKL 2024: கை மீறிய 2 புள்ளிகள்..! நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூரிடம் வீழ்ந்த புனேரி பல்தான்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: கை மீறிய 2 புள்ளிகள்..! நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூரிடம் வீழ்ந்த புனேரி பல்தான்

PKL 2024: கை மீறிய 2 புள்ளிகள்..! நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூரிடம் வீழ்ந்த புனேரி பல்தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 13, 2024 11:02 PM IST

ப்ரோ கபடி லீக் 2024 சீசனில் இதுவரை ஒரேயொரு தோல்வியை சந்தித்தித்த புனேரி பல்தான் அணியை நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீழ்த்தியுள்ளது. 8 போட்டிகளில் தொடர் வெற்றிக்கு பிறகு புனேரி பல்தான் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

புனேரி பல்தான் வீரரிடமிருந்து சிக்காமல் தப்பிக்க முயற்சிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர்
புனேரி பல்தான் வீரரிடமிருந்து சிக்காமல் தப்பிக்க முயற்சிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர்

இந்த இரு அணிகளும் டாப் இடத்தில் இருந்து வரும் நிலையில் போட்டி சுவாரஸ்ய மிக்கதாக இருந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் புனேரி பல்தான் ஆதிக்கம் செலுத்தியபோதிலும் பிற்பகுதியில் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஜெயப்பூர் அணி தொடர்ந்து புள்ளிகளை பெற்று முன்னேறியது. முழு ஆட்ட நேர முடிவில் 36-34 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.

இந்த சீசனில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்று வெற்றிகரமான அணியாக  வலம் வந்த புனேரி பல்தான் இரண்டாவது தோல்வியை அடைந்துள்ளது. 2 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்தான் வெற்றியை கைவிட்டது.

இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க பேந்தர்ஸ் அணி 20 ரெயிட், 10 டேக்கிள், 4 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

அதே போல் புனேரி பல்தான் அணி 23 ரெயிட், 4 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல்அவுட், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.

ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் 12 ரெயிட், 4 போனஸ் என 16 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார்.

புனேரி பல்தான் அணி இதுவரை ஹரியானா ஸ்டீலர்ஸ், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ஆகிய அணிகளுடன் மட்டும் தோல்வியை  சந்தித்துள்ளது. மற்ற அணிகளுக்கு எதிராக வெற்றியை பெற்றிருப்பதோடு, 52 புள்ளிகளை கடந்த முதல் அணியாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9    

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.