Indonesia Open: பேட்மிண்டன் போட்டியில் மீண்டும் வரலாறு படைத்தது சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி
இன்று ஜெயித்த மலேசிய ஜோடியைத் தான், உலக சாம்பியன்ஷிப்பில் சிராக் ஷெட்டி இணையை அரையிறுதியில் வீழ்த்தியிருந்தது.
இந்தோனேசியா ஆடவர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிகா ஜோடியை நேர் செட்களில் வீழ்த்தி, சூப்பர் 1000 பட்டத்தை வென்ற முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி ஆனார்.
மலேசிய இணையை 21-17, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது சாத்விக்-சிராக் ஷெட்டி இணை.
கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.
இன்று ஜெயித்த மலேசிய ஜோடியைத் தான், உலக சாம்பியன்ஷிப்பில் சிராக் ஷெட்டி இணையை அரையிறுதியில் வீழ்த்தியிருந்தது.
அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் இந்தோனேஷிய இணையை வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியிருந்தது.
அந்த மலேசிய இணையைத் தான் இன்றைய இறுதிப்போட்டியில் வீழ்த்தி ரங்கிரெட்டி இணை வரலாறு படைத்திருக்கிறது.
இவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அமலாபுரம் என்ற ஊரைச் சேர்ந்த ரங்கிரெட்டி, கடந்த காலங்களில் மாநில அளவிலான வீரராக இருந்த தனது தந்தை மற்றும் அவரது மூத்த சகோதரரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டில், ஐதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் சேர்ந்து இரட்டையர் பிரிவில் கலக்கி வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த சிராக் ஷெட்டி, 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு அணி பிரிவில் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்ததில் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். அங்கு அவர்கள் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்