sania mirza shoib malik divorce:சானியாவுக்கு சோயிப் தலாக் தலாக் தலாக்!
சானியா மிர்சாவை முத்தலாக் முறையில் சோயிப் மாலிக் விவாகரத்து செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்; இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை காதலித்து மணந்து கொண்டார் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். இருவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பல்வேறு எதிர்ப்புகள் சர்ச்சைகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சானியா மிர்சாவும், சோயிப் மாலிக்கும் கருத்து வேறுபாடுகளினால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இருவருக்கும் இஜான் மிர்சா மாலிக் என்ற 4 வயது மகன் உள்ளார்.
அண்மையில் மகன் பிறந்த நாளைக் கொண்டாடிய போட்டோக்களை சமூக தளங்களில் வெளியிட்டார் சோயிப். அந்தப் பதிவில், நாம் ஒன்றாக இணைந்து இருக்காமல், தினமும் சந்திக்காமல் இருக்கலாம். ஆனாலும் எப்போதும் அப்பா உன்னை(மகனை) பற்றியும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் உன் சிரிப்பையும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றுக் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து மகனுடன் தான் இருக்கும் போட்டோவை சமூக தளங்களில் பகிர்ந்த சானியா, கடினமான நாட்களைக் கடந்து செல்ல இதுபோன்ற தருணங்கள்தான் உதவுகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் மற்றொரு பதிவில், உடைந்த இதயங்கள் எங்கே செல்லும்... இறைவனைக் காண... என்று சோகத்துடன் குறிப்பிட்டிருந்தார் சானியா. ஆனால் இந்தப் பதிவை வெளியிட்ட சில நிமிடங்களில் அதை நீக்கிவிட்டார்.
சானியாவும் சோயிப்பும் பிரிந்து வாழ்ந்து வருகின்றநிலையில் இருவரும் தங்கள் மகனுக்காக அவ்வப்போது சந்தித்துக் கொள்கின்றனர். இவர்களது 12 ஆண்டுகால திருமணம் விரைவில் முடிந்துவிடும் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன. இந்நிலையில் இருவருக்கும் இடையே அதிகாரப்பூர்வமாக விவாகரத்து நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக கடந்த 2010ல் சானியா மிர்சாவை சோயிப் மாலிக் திருமணம் செய்தபோது பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்த ஆயிஷா என்ற பெண் சோயிப் மாலிக் ஏற்கெனவே தன்னை திருமணம் செய்து கொண்டார் என்றும் தற்போது ஏமாற்றிவிட்டார் என்றும் போலீஸில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சானியா சோயிப் தம்பதியிடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களது விவாகரத்துக்கு காரணம் இதுவாகவும் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
தற்போது அதிகாரப்பூர்வமாக இருவரும் பிரிந்து விட்ட தகவலைக் கேட்டு இருவரது ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.