Chennaiyin FC: மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியிருக்கும் சென்னையின் எஃப்சி ப்ளேஆஃப் வாய்ப்ப
மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியிருக்கும் சென்னையின் எஃப்சி ப்ளேஆஃப் வாய்ப்பை நெருங்கியுள்ளது.
ஐஎஸ்எல் 2023-24 தொடரின் இரண்டாம் பகுதி ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதுடன் தொடர்ச்சியாக பெற்ற மூன்று தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தற்போது வரை 14 போட்டிகளில் விளையாடியிருக்கும் சென்னையில் எஃப்சி அணி 4 வெற்றி, 7 தோல்வி, 3 போட்டிகளை டிரா செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் இருந்த சென்னை இந்த வெற்றியால் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அத்துடன் பிளேஆஃப் வாய்ப்பையும் இழக்காமல் தக்கவைத்துள்ளது.
சென்னைக்கு எதிரான தோல்வின் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது கேரளா பிளாஸ்டர்ஸ். உள்ளூர் ரசிகர்கள் ஆராவாரத்துடன் விளையாடிய சென்னையின் எஃப்சி போட்டியை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் சென்னை வீரர் ஆகாஷ் சங்வான் அணிக்கு முதல் கோல் பெற்று தந்தார். இதன் பின்னர் கோல் அடிக்கும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.
ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் சென்னை வீரர் அங்கித் முகர்ஜி ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். ஒரு வீரர் இல்லாத நிலையில் கேரளாவை கோல் அடிக்க விடாமல் சென்னை வீரர்கள் சிறப்பாக சமாளித்தனர்.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இதுவரை விளையாடிய 15 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று வலுவான அணியாக புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்