Siechem Madurai Panthers: சேலத்தை எளிதில் வீழ்த்தி மதுரை பேந்தர்ஸ் முதல் வெற்றி
TNPL 2023: இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது மதுரை பேந்தர்ஸ்.
சேலத்தில் நடந்த டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 15 வது லீக் ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மதுரை அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பேட்டிங் செய்தது.
சேலம் அணியில் தொடக்க வீரர்களாக அமித் சாத்விக், ஆகாஷ் சும்ரா ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆகாஷ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதிரடி வீரர் கவுசிக் காந்தியும் 3 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் வந்த மான் பஃப்னா, அபிஷேக், அமித் சாத்விக் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சன்னி சாந்து 16 ரன்களில் நடையைக் கட்டினார். இவ்வாறாக சேலம் அணி 90 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தவித்தது.
கேப்டன் அபிஷேக் தன்வார் மட்டும் நிதானமாக ஆடினார். ஆனால் அவரும் கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து கேட்ச் ஆனார். அதிகபட்சமாக தன்வார் 29 ரன்கள் எடுத்தார்.
இவ்வாறாக சேலம் அணி 19.4 ஓவர்களில் 98 ரன்களில் சுருண்டது. 120 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் விளையாடியது.
அந்த அணி 13 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி கண்டது.
மதுரை பேந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஆதித்யா, கேப்டன் ஹரி நிஷாந்த் ஆகியோர் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
பின்னர் வந்த ஜெகதீசன் கவுசிங் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரீ அபிஷேக் 32 ரன்களும், ஸ்வப்னில் சிங் 25 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அணியும் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்