Salem Spartans: 98 ரன்களில் சுருண்டது சேலம்: மதுரை பேந்தர்ஸ் அபார பந்துவீச்சு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Salem Spartans: 98 ரன்களில் சுருண்டது சேலம்: மதுரை பேந்தர்ஸ் அபார பந்துவீச்சு

Salem Spartans: 98 ரன்களில் சுருண்டது சேலம்: மதுரை பேந்தர்ஸ் அபார பந்துவீச்சு

Manigandan K T HT Tamil
Jun 24, 2023 08:54 PM IST

TNPL 2023: சேலம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களில் சுருண்டது.

சேலம் வீரர்கள்
சேலம் வீரர்கள் (@TNPremierLeague)

மதுரை அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பேட்டிங் செய்தது.

சேலம் அணியில் தொடக்க வீரர்களாக அமித் சாத்விக், ஆகாஷ் சும்ரா ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆகாஷ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதிரடி வீரர் கவுசிக் காந்தியும் 3 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் வந்த மான் பஃப்னா, அபிஷேக், அமித் சாத்விக் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சன்னி சாந்து 16 ரன்களில் நடையைக் கட்டினார். இவ்வாறாக சேலம் அணி 90 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தவித்தது.

கேப்டன் அபிஷேக் தன்வார் மட்டும் நிதானமாக ஆடினார். ஆனால் அவரும் கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து கேட்ச் ஆனார். அதிகபட்சமாக தன்வார் 29 ரன்கள் எடுத்தார்.

இவ்வாறாக சேலம் அணி 19.4 ஓவர்களில் 98 ரன்களில் சுருண்டது. 120 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் விளையாடவுள்ளது.

மதுரை பேந்தர்ஸ் அணி சார்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகளையும், கவுதம், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சேலம் அணியைப் பொருத்தவை சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலம். இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள சேலம் அணி, 1 இல் மட்டுமே ஜெயித்துள்ளது. 2 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது சேலம்.

இந்த சீசனின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸிடம் வீழ்ந்தது சேலம்.

எனினும், அடுத்த திருச்சி அணியை 5 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் நெல்லை அணியிடம் தோற்றது.

இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் சேலம் விளையாடியது. ஆனால், குறைந்த ஸ்கோரில் மதுரை அணி சேலத்தை கட்டுப்படுத்தியது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.